எம்-ஆதார் சேவைகளைப் பயன்படுத்த பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணை வைத்திருப்பது கட்டாயமா?

இல்லை. இந்தியாவில் ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் எவரும் mAadhaar செயலியை நிறுவி பயன்படுத்தலாம்.

ஆதார் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் இல்லாமல், குடிருப்பாளர் ஆதார் மறுபதிப்பு, பதிவு மையம், ஆதாரைச் சரிபார்த்தல், QR குறியீட்டை ஸ்கேன் செய்தல் போன்ற சில சேவைகளை மட்டுமே பெற முடியும்.

எவ்வாறாயினும், எனது ஆதார் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து ஆதார் சேவைகள் மற்றும் ஆதார் சுயவிவர சேவைகளைப் பெற பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண் கட்டாயமாகும். எந்தவொரு ஸ்மார்ட்போனிலும் நிறுவப்பட்ட பயன்பாட்டில் குடியிருப்பாளர்கள் தங்கள் சுயவிவரத்தை பதிவு செய்யலாம். இருப்பினும் அவர்களின் பதிவு செய்யப்பட்ட மொபைலுக்கு மட்டுமே OTP அனுப்பப்படும்.