யு.ஐ.டி.ஏ.ஐ.வின் நிர்வாக அமைப்பு

Shri J Satyanarayana , Chairman(part-time), UIDAI

திரு ஜெ. சத்தியநாராயணா

தலைவர் (பகுதி-நேரம்), இந்திய தனித்துவ அடையாள ஆணையம்

திரு. ஜெ. சத்தியநாராயணா, ஓய்வு பெற்ற இ.ஆ.ப. அதிகாரி (1977, ஆந்திரப் பிரதேசப் பிரிவு) இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் பகுதி நேரத் தலைவர் ஆவார்.

திரு சத்தியநாராயணா அரசு நிர்வாகத்தின் பல்வேறு துறைகளில் கிட்டத்தட்ட நான்கு பத்தாண்டுகளாக பணியாற்றிய அனுபவம் பெற்றவர் ஆவார். ஓய்வு பெறுவதற்கு முன்பாக 2012 முதல் 2014 வரை மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளராக பதவி வகித்தார். மின்னணு நிர்வாகத்தின் தத்துவம் மற்றும் கொள்கைகள் குறித்து அரசியல் தலைவர்களுக்கும், கொள்கை வகுப்பாளர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படுவதற்கு முக்கியக் காரணமாக இருந்தவர் இவர் தான்.

Dr. Anand Deshpande, Member (part-time), UIDAI

முனைவர். ஆனந்த் தேஷ்பாண்டே

உறுப்பினர்(பகுதி நேரம்), இந்திய தனித்துவ அடையாள ஆணையம்

முனைவர் ஆனந்த் தேஷ்பாண்டே இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் பகுதி நேர உறுப்பினராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

முனைவர் ஆனந்த் தேஷ்பாண்டே பெர்சிஸ்டண்ட் சிஸ்டம்ஸ் என்ற நிறுவனத்தின் நிறுவனரும் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனரும் ஆவார். இவர் கரக்பூர் ஐ.ஐ.டி.யில் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறையில் பி.டெக் (ஹானர்ஸ்) பட்டம் பெற்றவர். தொடர்ந்து அமெரிக்காவின் இண்டியானா புளூமிங்டன் பகுதியில் உள்ள இண்டியானா பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியலில் எம்.எஸ் மற்றும் பி.எச்டி பட்டங்களை வென்றிருக்கிறார். பெர்சிஸ்டண்ட் சிஸ்டம் நிறுவனம் 1990-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது முதல் இப்போது உலகளாவிய நிறுவனமாக உருவெடுத்திருப்பது வரை அதன் உந்து சக்தியாக திகழ்பவர் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Dr. Ajay Bhushan Pandey, Chief Executive Officer(CEO), UIDAI

முனைவர். அஜய் பூஷன் பாண்டே,

முதன்மை செயல் அலுவலர், இந்திய தனித்துவ அடையாள ஆணையம்

முனைவர் அஜய் பூஷன் பாண்டே இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் முதன்மை செயல் அலுவலர் ஆவார். ஆதார் திட்டத்தை அது தொடங்கப்பட்ட 2010-ஆம் ஆண்டிலிருந்து வழிநடத்திச் செல்பவரும் இவர் தான். நேரடி பயன் மாற்றத் திட்டம், நிதி உள்ளடக்கம், மின் ஆளுமை போன்ற திட்டங்களில் ஆதார் தளத்தை இணைப்பதற்காக மத்திய, மாநில அரசுகள், வங்கிகள், எண்ணெய் நிறூவனங்கள் மற்றும் பிற பங்குதாரர்களுடன் கடந்த ஆறு ஆண்டுகளாக நெருக்கமாக இணைந்து பணியாற்றி வருகிறார். இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான இவர் இந்திய அரசில் பல்வேறு பதவிகளில் கடந்த 30 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர் ஆவார்.

முனைவர் பாண்டே கரக்பூர் ஐ.ஐ.டி.யில் மின் பொறியியல் பட்டம் பெற்றார். பின்னர் 1998 ஆம் ஆண்டில் மின்னசோட்டா பல்கலைக்கழகத்தில் சேர்ந்த இவர் அங்கு கணினி அறிவியலில் எம்.எஸ் மற்றும் பி.எச்டி பட்டங்களை பெற்றார். 2009-ஆம் ஆண்டில், தாம் சார்ந்த பணியில் மிகச் சிறப்பான முறையில் தலைமையேற்று சாதனை படைத்ததற்காக பன்னாட்டு மேன்மைமிகு தலைமைப் பண்பு விருது மின்னசோட்டா பல்கலைக்கழகத்தால் இவருக்கு வழங்கப்பட்டது.