தொலைநோக்கு மற்றும் குறிக்கோள்

தொலைநோக்கு

தனித்துவ அடையாளம் மற்றும் எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் சரி பார்ப்பதற்கான மின்னனு தளத்துடன் வசிப்பாளர்களுக்கு அதிகாரமளித்தல்

இலக்கு

 • நல்ல நிர்வாகம், சிறப்பான வெளிப்படையான மற்றும் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட முறையில் மானியங்கள், பயன்கள் மற்றும் சேவைகளை வழங்குதல், இந்தியாவின் ஒருங்கிணைக்கப்பட்ட நிதியிலிருந்து செலவழிக்கப்படும் தொகையை மக்களுக்கு வழங்கப்பட்ட தனித்துவ அடையாள எண்களின் மூலம், இந்தியாவில் வசிக்கும் தனிநபர்களுக்கு வழங்குதல்
 • ஆதார் எண்ணுக்காக தங்களின் டிமோகிரா-ஃபிக் தகவல்கள், பயோமெட்ரிக் தகவல்கள் ஆகியவற்றை பதிவு நடைமுறைக்கு தங்களை உட்படுத்திக்கொள்வதன் மூலம் விண்ணப்பிக்கும் தனிநபர்களுக்கு ஆதார் எண் வழங்குவதற்கான கொள்கை, நடைமுறைகள் மற்றும் அமைப்பை உருவாக்குதல்.
 • ஆதார் எண் வைத்திருப்பவர்களுக்கு அவர்கள் குறித்த தகவல்களை திருத்துவதற்கும், அவர்களின் டிஜிட்டல் அடையாளத்தை சரிபார்ப்பதற்கும் தேவையான கொள்கை, நடைமுறைகள் மற்றும் அமைப்பை உருவாக்குதல்.
 • தொழில்நுட்ப கட்டமைப்பு கிடைப்பதையும், அதை உயர்த்துவதையும், விரிவுபடுத்துவதையும் விரிவு செய்தல்
 • இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் தொலைநோக்கு மற்றும் மாண்புகளை முன்னெடுத்துச் செல்வதற்கான நீண்டகாலம் தாக்குப்பிடிக்கக்கூடிய அமைப்பை உருவாக்குதல்.
 • அடையாளத் தகவல்கள் மற்றும் தனிநபர் சரிபார்ப்பு ஆவணங்களை பத்திரமாகவும், ரகசியமாகவும் வைத்திருப்பதை உறுதி செய்தல்.
 • அனைத்துத் தனிநபர்களும், அனைத்து முகமைகளும் ஆதார் சட்டத்தை எழுத்திலும் செயலிலும் முழுமையாக கடைபிடிப்பதை உறுதி செய்தல்.
 • ஆதார் சட்டத்தின் பிரிவுகளை செயல்படுத்துவதற்காக ஆதார் சட்டத்திற்கு ஏற்ற வகையில், விதிகளையும் விதிமுறைகளையும் உருவாக்குதல்.

மைய மாண்புகள்

 • நல்லாட்சிக்கு வழிவகுப்பதில் நாங்கள் நம்பிக்கை கொள்கிறோம்.
 • நம்பகத்தன்மையை நாங்கள் மதிக்கிறோம்.
 • உள்ளடக்கிய தேசத்தை கட்டமைக்க நாங்கள் உறுதிபூண்டிருக்கிறோம்.
 • நாங்கள் கூட்டு முயற்சியுடன் கூடிய அணுகுமுறையைக் கடைபிடிப்போம்; எங்கள் பங்காளிகளை மதிப்போம்.
 • வசிப்பாளர்களுக்கும் சேவை வழங்குவோருக்கும் சிறப்பான சேவைகளை வழங்க நாங்கள் போராடுவோம்.
 • தொடர்ச்சியான கற்றல் மற்றும் தர மேம்பாட்டில் நாங்கள் எப்போதும் கவனம் செலுத்துவோம்.
 • நாங்கள் புதுமைகளை படைப்போம், எங்களது கூட்டாளிகள் புதுமைகளை படைப்பதற்கான தளத்தை உருவாக்கித் தருவோம்.
 • வெளிப்படைத்தன்மை மற்றும் வெளிப்படையான அமைப்பு முறையில் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம்.