நிறுவன கட்டமைப்பு
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் புது தில்லியில் தலைமை அலுவலகத்தையும், நாடு முழுவதும் 8 மண்டல அலுவலகங்களையும் கொண்டிருக்கிறது. கர்நாடகத்தின் ஹெப்பல், ஹரியானா மாநிலத்தின் மனேசர் ஆகிய இரண்டு தகவல்கள் மையங்களையும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் கொண்டுள்ளது
தலைமையகம் (தலைமையகம்)
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அதன் தலைமை இயக்குனர் மற்றும் பணி இயக்குனர் (DG & MD), டாக்டர் அஜயபூஷன் பாண்டே, இ.ஆ.ப (1984)தலைமையில் செயல்பட்டு வருகிறது. தலைமை அலுவலகத்தில் அவருக்கு உதவியாக 7 துணைத் தலைமை இயக்குனர்களும், மத்திய அரசின் இணை செயலாளர்கள் நிலையிலான அதிகாரிகளும் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் பல்வேறு பிரிவுகளுக்கு தலைமையேற்றுள்ளனர். துணைத்தலைமை
இயக்குனர்களுக்கு ஆதரவாக உதவித் தலைமை
இயக்குனர்கள், துணை இயக்குனர்கள், பிரிவு அலுவலர்கள் மற்றும் உதவி பிரிவு அதிகாரிகள் பணியாற்றுகின்றனர். தலைமை அலுவலகத்தில் 127 அதிகாரிகளும், கணக்காளர்கள், தகவல் தொழில்நுட்ப வல்லுனர்கள் உள்ளிட்ட பணியாளர்களும் பணியாற்றுகின்றனர்.இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் எட்டு மண்டல அலுவலகங்களில் ஒவ்வொன்றும் துணைத் தலைமை இயக்குனர் தலைமையில் செயல்பட்டு வருகின்றன. உதவித் தலைமை இயக்குனர்கள், துணை இயக்குனர்கள், உதவி இயக்குனர்கள், பிரிவு அலுவலர்கள்,உதவி பிரிவு அலுவலர்கள், மூத்த கணக்கு அதிகாரி, கணக்காளர் மற்றும் பிற பணியாளர்களைக் கொண்ட உதவிக் கட்டமைப்பும் செயல்பட்டு வருகிறது
மண்டல அலுவலகங்கள் .
மண்டல அலுவலகங்கள் |
மண்டல அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் |
மண்டல அலுவலகம் , பெங்களூர் |
கர்நாடகா, கேரளா, தமிழ் நாடு, பாண்டிச்சேரி, லட்சத்தீவு |
மண்டல அலுவலகம் , சண்டிகர் |
ஜம்மு &காஷ்மீர், பஞ்சாப், அரியானா, இமாச்சல பிரதேசம் மற்றும் சண்டிகர் யூனியன் |
மண்டல அலுவலகம் , தில்லி |
உத்தரகண்ட், மத்தியப் பிரதேசம், தில்லி, ராஜஸ்தான் |
மண்டல அலுவலகம் , கவுகாத்தி |
அசாம், அருணாச்சல பிரதேசம், மேகாலயா, மணிப்பூர், நாகாலாந்து, மிசோராம், திரிபுரா மற்றும் சிக்கிம் |
மண்டல அலுவலகம் , ஐதராபாத் |
ஆந்திர பிரதேசம், தெலுங்கானா, ஒரிசா, சட்டிஸ்கர், அந்தமான் நிக்கோபார் |
மண்டல அலுவலகம் , லக்னோ |
உத்திரப்பிரதேசம் |
மண்டல அலுவலகம் , மும்பை |
குஜராத், மகாராஷ்டிரா, கோவா, தாத்ரா&நாகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூ |
மண்டல அலுவலகம் , ராஞ்சி |
பீகார், ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்கம் |