Authentication User Agencies
அறிமுகம்
சரிபார்ப்பு சேவை முகமைகள் எனப்படுபவை இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் தரங்கள் மற்றும் வரையறைகளுக்கு ஏற்ற வகையில் மத்திய அடையாளத் தகவல் தொகுப்புடன் பாதுகாக்கப்பட்ட தனிவழித்தட இணைப்புப்பெற்ற நிறுவனங்களாகும். வேண்டுகோள் விடுக்கும் நிறுவனங்கள் (AUAs/KUAs போன்றவை) தங்களது சரிபார்ப்பு வேண்டுகோள்களை மத்திய அடையாள தகவல் தொகுப்புக்கு அனுப்புவதற்காக தங்களின் இணைப்பு கட்டமைப்பு வசதியை சரிபார்ப்பு சேவை வழங்கும் நிறுவனங்கள் சேவையாக வழங்குகின்றன.
சரிபார்ப்பு சேவை முகமைகளை நியமித்தல்
- சரிபார்ப்பு சேவை முகமைகளாக நியமிக்கப்பட விரும்பும் நிறுவனங்கள், அதற்காக, இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் வரையறுக்கப்பட்ட விதிமுறைகள் படி விண்ணப்பிக்க வேண்டும். ஆணையத்தின் 'பி' அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளைக் கொண்ட நிறுவனங்கள் மட்டுமே விண்ணப்பிப்பதற்கு தகுதியானவையாகும். தகுதிகளில் மாற்றம் செய்வதற்கு வசதியாக தேவைப்படும் நேரங்களில் 'பி' அட்டவணையை ஆணை மூலம் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் திருத்தலாம்.
- விண்ணப்பத்தை பரிசீலித்து முடிவு எடுக்க அவசியம் என்று ஆணையம் கருதும் தகவல்கள் அல்லது விளக்கங்கள், சரிபார்ப்பு சேவை முகமைகளின் செயல்பாடுகள் தொடர்பான விவரங்கள் ஆகியவற்றையும் விண்ணப்பதாரர்கள் அளிக்கவேண்டும்.
- ஆணையத்தால் குறிப்பிடப்படும் காலவரையறைக்குள் ஆணையத்தை திருப்திபடுத்தும் அளவுக்கு தகவல்களையும், விளக்கங்களையும் விண்ணப்பதாரர்கள் வழங்கவேண்டும்-.
- விண்ணப்பத்தை பரிசீலிக்கும்போது விண்ணப்பதாரரால் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் மற்றும் விண்ணப்பதாரரின் தகுதிகள் சரியானவையா? என்பதை உறுதி செய்வதற்காக விண்ணப்பதாரரின் ஆவணங்கள், கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப வசதிகளை ஆணையம் நேரடியாக ஆய்வு செய்யக்கூடும்.
- விண்ணப்பம், ஆவணங்கள், விண்ணப்பதாரரால் வழங்கப்பட்ட தகவல்கள் மற்றும் அவரது தகுதி ஆகியவற்றை சரிபார்த்தபின் ஆணையம் கீழ்க்கண்ட நடவடிக்கைகளை எடுக்கலாம்.
அ. சரிபார்ப்பு சேவை முகமைக்கான விண்ணப்பத்திற்கு ஒப்புதல் அளிக்கலாம்.
ஆ. சேதங்களுக்கான இழப்பீடுகள், செயல்படாமல் இருப்பதற்கான அபராதங்கள் ஆகியவை உட்பட சரிபார்ப்பு சேவை முகமைகளுக்கான விதிகள் மற்றும் கட்டுப்பாடுகளை இணைத்து சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துகொள்ளலாம். - சரிபார்ப்பு சேவை நிறுவனங்கள் நியமிக்கப்படும்போது, விண்ணப்பக் கட்டணங்கள், ஆண்டு சந்தாக் கட்டணங்கள், தனிநபர் சரிபார்ப்புக்கான கட்டணங்கள் உட்பட அந்த நிறுவனம் செலுத்த வேண்டிய கட்டணங்களை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் நிர்ணயிக்கும்.
சரிபார்ப்பு சேவை முகமைகளின் பொறுப்புகள் மற்றும் தகவல் பாதுகாப்பு
சரிபார்ப்பு சேவை முகமைகளின் பொறுப்புகள் மற்றும் தகவல் பாதுகாப்புக்கான அம்சங்கள் குறித்து அறிய 2016ஆம் ஆண்டு ஆதார் சட்டம் மன்றும் விதிமுறைகளைப் பார்க்கவும்.