நிதி மற்றும் பட்ஜெட்

நிதி மற்றும் பட்ஜெட்

இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் நிதி பிரிவு

இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் நிதி பிரிவுக்கு துணைத் தலைமை இயக்குனர் (நிதி) தலைமை வகிக்கிறார். இவர் தான் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் நிதி ஆலோசகராகவும் செயல்படுவார். ஆணையத்தின் செயல்பாடுகள் தொடர்பான அனைத்து விஷயங்களிலும் அதன் நிதி தாக்கம் குறித்து தலைமை இயக்குனர் மற்றும் பணி இயக்குனருக்கு தொழில்முறை ஆலோசனைகளை நிதி பிரிவு வழங்கும்..

நிதி நிலை அறிக்கை உருவாக்கம், தாக்க நிதிநிலை அறிக்கை, செயல்திறன் நிதி நிலை அறிக்கை, செலவு மற்றும் பண மேலாண்மை , நிதி தாக்கம் ஏற்படுத்தக்கூடிய திட்டங்களை ஆய்வு செய்வது ஆகியவை நிதிப் பிரிவின் பணியாகும்..

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் நிதிப் பிரிவின் பணிகள்

நிதி ஆலோசனை / ஒப்புதல்

  • நிதி தாக்கங்களை முறையாக மதிப்பிடுவதற்கு உதவும் வகையில் கொள்கை மற்றும் வேலைத்திட்டம் உருவாக்குவதில் இணைந்து செயல்படுதல்;
  • அமைச்சரவை / EFC / SFC ஆகியவற்றின் திட்டங்கள் மற்றும் திருத்தப்பட்ட செலவு மதிப்பீடு திட்டங்கள் குறித்து அறிவுரை வழங்குதல்;
  • நிதி அதிகாரங்களை பகிர்ந்து அளித்தல் தொடர்பாக ஆலோசனை வழங்குதல்;
  • முதன்மை பொருளாதார ஆலோசகரின் செலவினக் கோணத்தில் அனுமதி அளித்தல்,தேவையை ஏற்றுக் கொள்ளுதல்ஆகியவற்றுக்கான நிதித் திட்டங்களுக்கு அரசின் அனுமதியை அளித்தல் ஆகியவற்றுக்கும், அரசின் செலவுகள் சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களிலும் நிதி அறிவுரை வழங்குதல்;
  • அனைத்துத் திட்டங்களையும் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள், செயல்பாட்டுத் தேவைகள் மற்றும் போதிய அளவு கூர்மைத் தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பீடு செய்தல்;
  • ஒப்பந்தப் புள்ளிகள்/ திட்டங்களுக்கு அழைப்பு விடுத்தல், ஒப்பந்தங்கள், ஒப்பந்தங்களில் திருத்தம் ஆகியவற்றை சரிபார்த்தல்;
  • பல்வேறு குழுக்களுக்கு நிதி பிரதிநிதிகளை நியமித்தல் மற்றும் பங்கேற்க வைத்தல்(சி.ஏ.பி, ஒப்பந்தப்புல்ளி திறப்பு மற்றும் மதிப்பிடுதல் குழுக்கள், வணிக பேரக் குழுக்கள், பிறக்குழுக்கள்); மற்றும்
  • கொள்முதல் மற்றும் ஒப்பந்தங்கள் தொடர்பான ஒழுங்குமுறையை அலுவலகத்தில் ஏற்படுத்துதல். கொள்முதல் செய்தல் மற்றும் ஒப்பந்தம் வழங்குவதில் உரிய கவனம் செலுத்தப்படுவதையும், மத்திய நிதி அமைச்சகத்தின் விதிகள் மற்றும் வழிகாட்டுதல்கள் கடைபிடிக்கப்படுவதையும் உறுதி செய்வதற்காக கொள்முதல் கையேடு தயாரித்து வெளியிடுவதன் மூலம் இதை சாத்தியமாக்கலாம்..

பட்ஜெட் தயாரிப்பு

  • பட்ஜெட் தயாரிப்பு மற்றும் அது தொடர்புடைய வேலை (வரவுசெலவுத் திட்ட மதிப்பீடு, திருத்தப்பட்ட மதிப்பீடு மற்றும் துணை மானியக் கோரிக்கைகளை தயாரித்தல்);
  • தலைமையகத்தில் உள்ள செயல்பாட்டு பிரிவுகள் மற்றும் மண்டல அலுவலகங்களுக்கு நிதி ஒதுக்குதல்;
  • இறுதித் தேவைகளை தயாரித்தல், சேமிப்புகள் மற்றும் மறு நிதிஒதுக்கக் கோரிக்கைகளை உரிய நேரத்தில் தாக்கல் செய்தல்; மற்றும்
  • இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தொடர்பான நிதித்துறையின் பாராளுமன்ற நிலைக்குழு தொடர்பான பணிகளை மேற்கொள்ளுதல்.

செலவினம் கண்காணிப்பு

  • ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் எந்த அளவு செலவு செய்யப்பட்டிருக்கிறது என்பதை மாதாந்திர அடிப்படையில் கண்காணித்து, மீண்டும் ஆய்வு செய்தல்;
  • பொருளாதாரம்/ செலவுகளை சிக்கனமாக்குதல் தொடர்பாக செலவினத்துறை சார்பில் வெளியிடப்பட்ட விதிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்தல்
  • சம்பளம் மற்றும் கணக்குகள் அலுவலகபணிகளை கண்காணித்தல்.

உள்துறை தணிக்கை

  • உள் அலுவலக தணிக்கைத் திட்டம்(தலைமை அலுவலகத்தின் காலாண்டுத் தணிக்கை, தலைமை அலுவலகத்திலுள்ள செயல்பாட்டு பிரிவுகளின் ஆண்டு செயல்பாட்டுத் தணிக்கை மற்றும் மண்டல அலுவலகங்கள்/ தொழில்நுட்ப மையங்களின் ஆண்டுத் தணிக்கை) மற்றும் இதற்கான மனித வளத்தை நியமித்தல்;
  • தலைமை அலுவலகப் பிரிவுகள்/ மண்டல அலுவலகங்கள்/ தொழில்நுட்ப மையங்கள் ஆகியவற்றின் உள் அலுவலக தணிக்கைகளை தணிக்கைகளை முடித்து சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு வழங்குதல்; மற்றும்
  • உள் அலுவலக தணிக்கையில் தெரிவிக்கப்பட்ட அம்சங்கள் கடைபிடிக்கப்படுவதற்கான தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.

பிற நடவடிக்கைகள்

  • இந்திய தனித்துவ அடையாள ஆணையம் குறித்த சிஏஜி / பிஏசி / தணிக்கை குறிப்பாணைகள் தொடர்பான பணிகள்;
  • தில்லியில் உள்ள தணிக்கைத் துறை தலைமை இயக்குனர் அலுவலகம் வெளியிட்ட தணிக்கை குறிப்பாணைகளை செயல்பாட்டு பிரிவுகள் பின்பற்றி நடத்தல்/ பதில் அளித்தல் ஆகியவை குறித்த குறிப்புகளை சரிபார்த்தல்
  • தலைமை கணக்காயர் அனுப்பிய தணிக்கை குறிப்பாணை மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை தயாரித்தல்
  • ஆண்டறிக்கை, பொருளாதார ஆய்வறிக்கை, பிரதமர் அலுவலகத்திற்கான மாதாந்திர அறிக்கை ஆகியவற்றுக்கான உள்ளீடுகள் வழங்குதல்
  • இந்திய தனித்துவ அடையாள ஆணைய அதிகாரிகளின் வெளிநாட்டுப் பணி திட்டங்களை ஆய்வு செய்து ஒப்புதல் அளித்தல்

பட்ஜெட் மற்றும் செலவு

இந்தியதனித்துவ அடையாள ஆணையம் தொடங்கப்பட்டதிலிருந்து அதன் பட்ஜெட் மற்றும் செலவுகள்:

$Excess expenditure met from unspent grant of 2018-19
*Excess expenditure met from unspent grant of 2018-19 & 2019-20 and UIDAI Fund
**Including Rs.110 crore received as supplementary grant
#Excess expenditure met from UIDAI Receipt.
@ Expenditure up to August 2023

சிறப்பான முறையில் நமது பொறுப்புகளை செய்வதற்காக நாங்கள் கீழ்க்கண்ட வெளியீடுகளை பின்பற்றுவோம்.

  • பொது நிதி விதிகள் 2017
  • இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் கொள்முதல் கையேடு
  • Delegation of Financial Powers Rules (DFPR)
  • நிதி அமைச்சகம், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், மத்திய கண்காணிப்பு ஆணையம் ஆகியவற்றால் வெளியிடப்பட்ட பிற அறிவுறுத்தல்கள்.

ஆணைய அமைப்பு முறை விளக்கப்படம்

துணைத் தலைமை இயக்குனருக்கு (நிதி) பின்வரும் அதிகாரிகள் குழு உதவியாக உள்ளது:

organizational chart

UIDAI Summarized Financial position as on 31st August, 2023

31- Grants in Aid: General

785.00

427.08

261.54

65.63

327.17

41.68%

35- Grants for creation of capital assets

90.00

55.00

50.33

87.90

138.23

153.59%

36- Grants-in-aid salaries

65.00

35.00

28.78

6.41

35.19

54.14%

Total

940.00

517.08

340.65

159.94

500.59

53.25%