இந்திய தனித்துவ அடையாள ஆணையம் பிராண்ட்

தகவல், கல்வி மற்றும் தொடர்பு உத்தி

இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் தகவல், கல்வி மற்றும் தொடர்பு உத்தியின் நோக்கம் ஆதார் மூலம் கிடைக்கும் பல்வேறு பயன்பாடுகள் மற்றும் பயன்கள் குறித்து விழிப்புணர்வு பெறுவதற்காக அனைத்து பங்குதாரர்கள் மற்றும் வசிப்பாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதுதான். அரசு மற்றும் பிற திட்டங்களின் பயன்கள் உண்மையான பயனாளிகளை சென்றடைவதற்கு வசதியாக ஆதார் பயன்பாடு குறித்த தகவல்களை இந்திய தனித்துவ அடையாள ஆணையத்துடன் இணைந்து பதிவாளர் பரப்புவார். அனைத்து வசிப்பாளர்களுக்கும் தகவல்கள் சென்றடையும் வகையில் விரிவான ஒளிபரப்பை உறுதி செய்வதற்காக ஆதார் குறித்த தகவல்கள், கீழ்க்கண்ட ஊடகங்கள் மூலம் பரப்பப்படும்.

  • ஒலிபரப்பு மற்றும் ஒளிபரப்பு: தொலைக்காட்சி, வானொலி, அச்சு ஊடகம், இணைய ஊடகம்
  • தகவல்: செய்திகள் மற்றும் வெளியீடுகள்
  • வெளிப்புற விளம்பரங்கள்: சுவரொட்டிகள், துண்டறிக்கைகள், சுவர் விளம்பரங்கள், பேனர்கள், ஹோர்டிங்குகள்
  • பொழுதுபோக்கு: சினிமா, விளையாட்டு, நட்சத்திரங்கள் மூலமான விளம்பரங்கள்
  • மனிதர்கள் வழி விளம்பரம்: ஆடியோ, வீடியோ, தொலைத்தொடர்பு
  • ஆதரவு கட்டமைப்பு: பதிவாளர் மற்றும் பதிவு முகமை கட்டமைப்பு

தகவல், கல்வி மற்றும் தொடர்புக்கான நிதி ஒதுக்கீடு

ஆதார் தரப்பெயருடன் நேரடி தொடர்புகொண்ட அனைத்து பொருட்களையும், உற்பத்தி செய்து செயல்படுத்தும் கட்டத்தில் எங்கெல்லாம் நிதி தேவைப்படுகிறதோ, அங்கெல்லாம் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் நிதி வழங்கும். ஆதார் தரப்பெயர் உட்பட பதிவாளருடன் சம்பந்தப்பட்ட தகவல் தொடர்பு பொருட்கள் அனைத்திற்கும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் நிதி வழங்கும். எனினும், ஆதார் பற்றிய தகவல்களை பரப்புவது குறித்த சிறப்புத் தேவைகளுக்காக பதிவாளருக்கு ஏதேனும் கூடுதல் அம்சங்கள் தேவைப்பட்டால் அதை பதிவாளர்தான் செய்துகொள்ள வேண்டும். இந்தியத் தனித்துவ அடையாள ஆணையத்தைச் சேர்ந்த அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட ஒரு குழு விளம்பரம் மற்றும் மக்கள் தொடர்பு போன்ற இதில் சம்பந்தப்பட்ட அமைப்புகளுடன் சேர்ந்து தகவல், கல்வி, தொடர்பு உத்தியை செயல்படுத்துவதில், பதிவாளருடன் கைகோர்த்து செயல்படும்.

விழிப்புணர்வு மற்றும் தொடர்பு உத்தி ஆலோசனைக் குழு

  • தனித்துவ அடையாள எண் திட்டத்தின் வெற்றிக்கு விழிப்புணர்வு மற்றும் தொடர்பு உத்தியின் முக்கியத்துவத்தை அங்கீகரித்த இந்திய தனித்துவ அடையாள எண் ஆணையம், அதன் நோக்கத்தை எட்டுவதற்குத் தேவையான விழிப்புணர்வு மற்றும் தொடர்பு உத்திகளை வழங்குவதற்காக, விழிப்புணர்வு மற்றும் தொடர்பு உத்தி ஆலோசனைக் குழுவை நியமித்துள்ளது. இந்தக் குழுவை அமைத்து பிறப்பிக்கப்பட்ட ஆணை மற்றும் அதன் பணிகள் குறித்த விவரங்களை இங்கே காணலாம்: விழிப்புணர்வு மற்றும் தொடர்பு உத்தி ஆலோசனைக் குழு ஆணை