இந்திய தனித்துவ அடையாள ஆணையம் குறைதீர்ப்பு

Grievances at UIDAI are received through following channels:

இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் தொடர்பு மையம் மூலம்

ஆதார் பதிவு, தகவல்களை மேம்படுத்துதல் மற்றும் பிற சேவைகள் தொடர்பாக குறைகள் மற்றும் விசாரணைகளை கையாள்வதற்காக இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தொடர்பு மையத்தை அமைத்திருக்கிறது. பதிவு மையத்தில் பதிவு நடைமுறை முடிவடைந்த பிறகு வசிப்பாளருக்கு அச்சிடப்பட்ட ஒப்புகைச் சீட்டை பதிவு ஆப்பரேட்டர் வழங்குவார். அதில் பதிவு அடையாள எண் இடம்பெற்றிருக்கும். பதிவு அடையாள எண்ணைப் பயன்படுத்தி, வசிப்பாளர்கள் கீழ்க்கண்ட வழிகளில் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் தொடர்பு மையத்தை அணுகலாம்.

தொடர்பு மைய விவரங்கள்
பதிவாளர் தளம்

அஞ்சல் மூலமாக

இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் தலைமை அலுவலகம் மற்றும் மண்டல அலுவலகங்களில் அஞ்சல் மூலமாகவும் / எழுத்து மூலமாகவும் புகார்கள் பெறப்படுகின்றன. அந்தக் குறைகள் ஆய்வு செய்யப்பட்டு காகித வடிவில் மண்டல அலுவலகங்கள் / தலைமை அலுவலகத்தில் உள்ள சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கு இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் பொது குறைதீர்ப்பு அலுவலரான உதவி தலைமை இயக்குநரின் ஒப்புதல் பெற்று அனுப்பி வைக்கப்படுகிறது. அந்தப் புகார்களை ஆய்வு செய்யும் மண்டல அலுவலகங்கள் / சம்பந்தப்பட்ட பிரிவுகள் அவை தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களுக்கு நேரடியாக பதிலளிப்பதன் மூலம் குறைகளை களைகிறார்கள். இதுகுறித்த தகவல்கள் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் தலைமை அலுவலகத்தில் உள்ள குறைதீர்க்கும் பிரிவுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. இடைக்கால பதில்கள் ஏதேனும் தேவைப்பட்டால், அவற்றை சம்பந்தப்பட்ட மண்டல அலுவலகங்கள் / தலைமை அலுவலகத்தின் பிரிவுகள் வழங்குகின்றன.

இந்திய அரசின் பொது குறைதீர்ப்பு இணையதளம் மூலமாக பெறப்படும் குறைகள்

இந்திய அரசின் பொது குறைதீர்ப்பு தளமான pgportal.gov.inமூலம் குறைகள் வழங்கப்படுகின்றன. அந்த இணையதளத்தில் உள்ள கீழ்க்கண்ட வழிமுறைகளில் குறைகள் பெறப்படுகின்றன:

  • பொதுமக்கள் குறைகளுக்கான இயக்குநரகம்
  • நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொது குறைதீர்ப்புத்துறை
  • மூல அமைப்பு
  • நேரடியாகப் பெறுதல்
  • குடியரசுத் தலைவர் செயலகம்
  • ஓய்வூதியம்
  • அமைச்சர்கள் அலுவலகம்
  • பிரதமரின் அலுவலகம்

பெறப்படும் புகார்கள் ஆய்வு செய்யப்பட்டு, இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் பொது குறைதீர்ப்பு அலுவலரான உதவி தலைமை இயக்குநரின் ஒப்புதல் பெற்று மண்டல அலுவலகங்கள் / சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கு ஆன்லைன் மூலம் அனுப்பப்படுகின்றன. சம்பந்தப்பட்ட மண்டல அலுவலகங்கள் / தலைமை அலுவலகப் பிரிவுகள் அக்குறைகளை ஆன்லைன் மூலம் சரி செய்கின்றன. இடைக்கால பதில்கள் ஏதேனும் தேவைப்பட்டால், அவற்றை சம்பந்தப்பட்ட மண்டல அலுவலகங்கள் / தலைமை அலுவலகத்தின் பிரிவுகள் வழங்குகின்றன.

மின்னஞ்சல் மூலமாக

பல நேரங்களில், இந்திய தனித்துவ அடையாள ஆணைய அதிகாரிகளுக்கு மின்னஞ்சல் மூலமாக குறைகள் வருகின்றன. அவை ஆய்வு செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட மண்டல அலுவலகம் / தலைமை அலுவலகப் பிரிவுகளுக்கு அனுப்பப்படுகின்றன. அவற்றுக்கு சம்பந்தப்பட்ட மண்டல அலுவலகம் / தலைமை அலுவலகப் பிரிவுகள் மின்னஞ்சல் மூலம் பதிலளிப்பதன் மூலம் குறைகளை களைகின்றன. இதுகுறித்த விவரங்கள் குறைதீர்க்கும் பிரிவுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.