யு.ஐ.டி.ஏ.ஐ பற்றி
பதிவு மற்றும் புதுப்பித்தல் சூழல் அமைப்பு
பதிவு சூழல் அமைப்பு பதிவாளர்கள் மற்றும் பதிவு முகமைகளைக் கொண்டுள்ளது. பதிவாளர் எனப்படுவது வசிப்பாளர்களை பதிவு செய்வதற்காக இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் அங்கீகரித்து அதிகாரமளிக்கப்பட்ட அமைப்பு ஆகும். பதிவு முகமைகள் எனப்படுபவை பதிவாளர்களால் நியமிக்கப்படும் அமைப்பு ஆகும். பதிவு நடைமுறையின் போது சான்றளிக்கப்பட்ட ஆபரேட்டர்கள்/ மேற்பார்வையாளர்களை நியமித்து தனிநபர்களின் டெமோகிராபிக் மற்றும் உடற்கூறு தகவல்களை சேகரிப்பது தான் இவற்றின் பணியாகும்.
பதிவாளர்களுடன் இணைந்து பதிவு மையங்களை பதிவு முகமைகள் அமைக்கும். அந்த மையங்களில் ஆதாருக்காக வசிப்பாளர்கள் பதிவு செய்து கொள்ளலாம். பதிவுக்காக பயன்படுத்தப்படும் ஒன்றுக்கும் மேற்பட்ட கைரேகை பதிவு ஸ்கேனர்கள், கருவிழிப் பதிவு கருவிகள், காமிராக்கள் ஆகியவை தரஆய்வுமற்றும்தரச்சான்றுஅமைப்பு மற்றும் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் சான்றளிக்கப்பட்டு இருப்பதுடன், ஆணையத்தால் வடிவமைக்கப்பட்ட ஏ.பி.ஐயுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். பல பதிவாளர்களையும், பதிவு முகமைகளையும், தொழில்நுட்ப உதவி வழங்குபவர்களையும் நியமிப்பதன் மூலம் சூழல் அமைப்பில் ஆரோக்கியமான போட்டியை உருவாக்க முடியும்.
ஆதார் எண்ணின் சரிபார்ப்பு சூழல் அமைப்பு
வசிப்பாளர்களின் அடையாளத்தை உடனடியாக சரிபார்ப்பதற்காக தேவைக்கேற்ப திறனை அதிகரித்துக் கொள்ளும் வகையில் சரிபார்ப்பு சூழல் அமைப்பை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அமைத்துள்ளது. தினந்தோறும் கோடிக்கணக்கான சரிபார்ப்புகளை மேற்கொள்ளும் வகையில் இந்த சூழல் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. தேவைக்கேற்ப இதன் திறனை மேலும் அதிகரித்துக் கொள்ள முடியும்.இதற்காக ஏராளமான சரிபார்ப்பு சேவை முகமைகள் மற்றும் சரிபார்ப்பு பயனாளர் முகமைகளை பல்வேறு அரசு அமைப்புகள் மற்றும் அரசு சாரா அமைப்புகளில் இருந்து தேர்வு செய்து இந்திய தனித்துவ அடையாள ஆணையம் நியமித்துள்ளது.
சரிபார்ப்பு சேவை என்பது ஆன்லைனில் உடனுக்குடன் வழங்கப்படுவதால், அதற்கு உதவும் வகையில் இரு தகவல் மையங்களை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ஏற்படுத்தியுள்ளது. இந்த தகவல் மையங்களில் சரிபார்ப்பு தகவல்கள் மற்றும் மின்னணு கே.ஒய்.சி உள்ளிட்ட பிற ஆன்லைன் சேவைகள் எப்போதும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கின்றன.வங்கிகள் மற்றும் பணம் வழங்கும் கட்டமைப்ப்பு ஆபரேட்டர்கள் கிளையில்லாத வங்கிச் சேவைகளை நாடு முழுவதும் உடனுக்குடனும், திறனை அதிகரிக்கும் வசதிகளுடனும், தகவல்களை பரிமாறிக்கொள்ளும் வசதியுடனும் வழங்குவதற்கு வசதியாக அவர்களின் மைக்ரோ ஏ.டி.எம்.களில் ஆதார் சரிபார்ப்பு சேவையை பொருத்தியுள்ளனர்.