Authentication Requesting Agency

அறிமுகம்

2016 ஆம் ஆண்டு ஆதார் சட்டத்தின்படி, ஒரு வேண்டுகோள் விடுக்கும் நிறுவனம் என்பது ஒரு தனி மனிதனின் ஆதார் எண் மற்றும் டெமோகிராபிக் தகவல் அல்லது உடற்கூறு தகவலை ஆதார் சரிபார்ப்புக்காக மத்திய அடையாள தகவல் ஆணையத்திற்கு அனுப்பும் முகமை அல்லது தனிநபர் ஆவார்.

சரிபார்ப்பு பயனாளர் முகமை என்பது ஆதார் சரிபார்ப்பு சேவை முகமை வழங்கும் சரிபார்ப்பு சேவையை பயன்படுத்தி ஆதார் எண் வைத்திருப்பவர்களுக்கு ஆதார் சார்ந்த சேவைகளை வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ள நிறுவனம் ஆகும். ஒரு சரிபார்ப்பு பயனாளர் முகமை இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட அரசு / பொது / தனியார் சட்ட முகமை ஆகும். இது இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் ஆதார் சரிபார்ப்பு சேவைகளை பயன்படுத்துவதுடன் ஆதார் சேவைகள் / வணிகப் பயன்களைப் பெறுவதற்கான சரிபார்ப்பு வேண்டுகோள்களையும் அனுப்புகிறது.

துணை சரிபார்ப்பு பயனாளர் முகமைகள் எனப்படுபவை அதன் சேவைகளுக்காக ஏற்கனவே உள்ள ஒரு வேண்டுகோள் விடுக்கும் அமைப்பின் ஆதார் சரிபார்ப்பு வசதியை பயன்படுத்திக் கொள்பவை ஆகும்.

ஒரு வேண்டுகோள் விடுக்கும் நிறுவனம்(சரிபார்ப்பு பயனாளர் முகமை, அறிவீர் உங்கள் வாடிக்கையாளரை(கே.ஒய்.சி) பயனாளர் முகமை போன்றவை) ஒரு சரிபார்ப்பு சேவை முகமை (சொந்தமாக சரிபார்ப்பு முகமையாக மாறியோ அல்லது ஏற்கனவே உள்ள முகமையுடன் ஒப்பந்தம் செய்து கொண்டோ) மூலம் மத்திய அடையாளத் தகவல் தொகுப்பை தொடர்பு கொள்கிறது.

பயன்பாட்டில் உள்ள சரிபார்ப்பு பயனாளர் முகமைகள்

பயன்பாட்டில் உள்ள கேஒய்சி பயனாளர் முகமைகள்

<h2வேண்டுகோள் விடுக்கும் நிறுவனங்களை நியமித்தல் (சரிபார்ப்பு பயனாளர் முகமை & மின்னணு கே.ஒய்.சி. முகமைகள்)
  • வேண்டுகோள்விடுக்கும் நிறுவனங்களாக நியமிக்கப்பட விரும்பும் நிறுவனங்கள், அதற்காக, இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் வரையறுக்கப்பட்ட விதிமுறைகள் படி விண்ணப்பிக்க வேண்டும். ஆணையத்தின் 'ஏ' அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளைக் கொண்ட நிறுவனங்கள் மட்டுமே விண்ணப்பிப்பதற்கு தகுதியானவையாகும். தகுதிகளில் மாற்றம் செய்வதற்கு வசதியாக தேவைப்படும் நேரங்களில் 'ஏ' அட்டவணையை ஆணை மூலம் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் திருத்தலாம்.
  • விண்ணப்பத்தை பரிசீலித்து முடிவு எடுக்க அவசியம் என்று ஆணையம் கருதும் தகவல்கள் அல்லது விளக்கங்கள், வேண்டுகோள் விடுக்கும் நிறுவனங்களின் செயல்பாடுகள் தொடர்பான விவரங்கள் ஆகியவற்றையும் விண்ணப்பதாரர்கள் அளிக்கவேண்டும்.
  • ஆணையத்தால் குறிப்பிடப்படும் காலவரையறைக்குள் ஆணையத்தை திருப்திபடுத்தும் அளவுக்கு தகவல்களையும், விளக்கங்களையும் விண்ணப்பதாரர்கள் வழங்கவேண்டும்-.
  • விண்ணப்பத்தை பரிசீலிக்கும்போது விண்ணப்பதாரரால் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் மற்றும் விண்ணப்பதாரரின் தகுதிகள் சரியானவையா? என்பதை உறுதி செய்வதற்காக விண்ணப்பதாரரின் ஆவணங்கள், கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப வசதிகளை ஆணையம் நேரடியாக ஆய்வு செய்யக்கூடும்.
  • விண்ணப்பம், ஆவணங்கள், விண்ணப்பதாரரால் வழங்கப்பட்ட தகவல்கள் மற்றும் அவரது தகுதி ஆகியவற்றை சரிபார்த்தபின் ஆணையம் கீழ்க்கண்ட நடவடிக்கைகளை எடுக்கலாம். அ. வேண்டுகோள் விடுக்கும் நிறுவனங்களுக்கான விண்ணப்பத்திற்கு ஒப்புதல் அளிக்கலாம். ஆ. சேதங்களுக்கான இழப்பீடுகள், செயல்படாமல் இருப்பதற்கான அபராதங்கள் ஆகியவை உட்பட வேண்டுகோள் விடுக்கும் நிறுவனங்களுக்கான விதிகள் மற்றும் கட்டுப்பாடுகளை இணைத்து சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துகொள்ளலாம்.
  • வேண்டுகோள் விடுக்கும் நிறுவனங்கள் நியமிக்கப்படும்போது, விண்ணப்பக் கட்டணங்கள், ஆண்டு சந்தாக் கட்டணங்கள், தனிநபர் சரிபார்ப்புக்கான கட்டணங்கள் உட்பட அந்த நிறுவனம் செலுத்த வேண்டிய கட்டணங்களை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் நிர்ணயிக்கும்.

கட்டாயப் பாதுகாப்புத் தேவைகள்

  • ஆதார் எண்ணை டொமைன் சார்ந்த அடையாளமாக ஒருபோதும் பயன்படுத்தக்கூடாது.
  • ஒருவேளை ஆபரேட்டர் உதவியுடன் இயக்கப்படும் கருவிகளின் பயன்பாடாக இருந்தால், கடவுச்சொல், ஆதார் சரிபார்ப்பு- போன்ற முறைகளைப் பயன்படுத்தி, ஆபரேட்டர்கள் சரிபார்க்கப்படவேண்டும்.
  • சரிபார்ப்பு தொகுப்பின் ஓர் அங்கமாக வழங்கப்படும் குறியிடப்பட்ட தனிநபர் அடையாள வில்லை மற்றும் உரிம சாவிகள் கணினியில் எங்கும் சேமித்து வைக்கப்பட்டிருக்கக் கூடாது.
  • குறியிடப்பட்ட தனிநபர் அடையாள வில்லைகள், குறுகிய கால, தற்போதைய நிலையில் 24 மணி நேர தொகுப்பு சரிபார்ப்புக்காக வைக்கப்பட்டிருந்தால் ஒழிய, அதை சேமித்து வைக்கக்கூடாது.
  • ஆதார் சரிபார்ப்புக்காக பதிவு செய்யப்பட்ட உடற்கூறு மற்றும் ஒருமுறைப் பயன்பாட்டு கடவுச் சொற்கள் எந்தவிதமான நிரந்தர தொகுப்பிலோ அல்லது தகவல் தொகுப்பிலோ சேமித்து வைக்கப்படக்கூடாது.
  • சரிபார்ப்பு சேவை மையங்கள் மூலம் அனுப்பப்படும் அனைத்துத் தகவல்கள் மற்றும் அதற்குக் கிடைக்கும் பதில்கள் அனைத்தும் தணிக்கைப் பயன்பாட்டிற்காக பதிவு செய்து வைக்கப்படவேண்டும்.
  • சரிபார்ப்பு சேவை முகமைகளுக்கும், சரிபார்ப்பு பயனாளர் முகமைகளுக்கும் இடையிலான இணைப்பு பாதுகாப்பானதாக இருக்க வேண்டும்.

வேண்டுகோள் விடுக்கும் நிறுவனங்களின் (AUA/KUA) பொறுப்புகள் மற்றும் தகவல் பாதுகாப்பு

வேண்டுகோள் விடுக்கும் நிறுவனங்களின் (AUA/KUA) பொறுப்புகள் மற்றும் தகவல் பாதுகாப்புக்கான அம்சங்கள் குறித்து அறிய 2016ஆம் ஆண்டு ஆதார் சட்டம் மன்றும் விதிமுறைகளைப் பார்க்கவும்