யு.ஐ.டி.ஏ.ஐ பற்றி

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) என்பது ஆதார் ( நிதி மற்றும் பிற மானியங்கள், பயன்கள் மற்றும் சேவைகள் ஆகியவற்றை உண்மையான பயனாளிகளை கண்டறிந்து வழங்குதல்) சட்டம், 2016 (”ஆதார் சட்டம் 2016”) -ன் பிரிவுகள் படி 12.07.2016 அன்று இந்திய அரசால் நிறுவப்பட்டமின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சகத்தின் (MeitY) கீழ் செயல்படும் சட்டப்பூர்வமான ஆணையமாகும்.

சட்டப்பூர்வ ஆணையமாக மாற்றப்படுவதற்கு முன் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் 28 ஜனவரி 2009 அன்றுவெளியிடப்பட்ட ஏ-43011/02/2009-Admn.1 என்ற எண் கொண்ட அறிவிக்கை மூலம் ஏற்கனவே இருந்த இந்திய திட்ட ஆணையத்தின் (இப்போதைய நிதி ஆயோக்) இணைப்பு அலுவலகமாக செயல்பட்டு வந்தது.பின்னர்12 செப்டம்பர் 2015 அன்று இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தை தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் மின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறையுடன் (DeitY) இணைக்கும் வகையில் அலுவல் ஒதுக்கீட்டு விதிகளை மத்திய அரசு திருத்தியது.

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் இந்தியாவின் அனைத்து மக்களுக்கும் ஆதார் என்று பெயரிடப்பட்ட ஒரு தனித்துவ அடையாள எண் வழங்கும் நோக்குடன் உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பால் வழங்கப்படும் ஆதார் எண் (அ) இரட்டைப் பதிவு மற்றும் போலி அடையாளங்களைநீக்கும் அளவுக்கு வலிமையாக இருக்க வேண்டும்(ஆ) எளிமையாகவும், குறைந்த செலவிலும் சரிபார்க்கும் வகையிலும் இருக்க வேண்டும் என்பது என்பதும் இதன் நோக்கங்களில் ஒன்றாகும். முதல் ஆதார் மகாராஷ்டிராவின் நந்தர்பார்பகுதியைச் சேர்ந்த வசிப்பாளருக்கு 29 செப்டம்பர் 2010 அன்று வழங்கப்பட்டது. இதுவரை இந்தியாவின் வசிப்பளார்களில் 120 கோடி பேருக்கும் அதிகமாக ஆதார் அடையாள எண் வழங்கப்பட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டின் ஆதார் சட்டப்படி ஆதார் வாழ்க்கைச் சூழற்சியின் அனைத்து நிலைகளிலும் இயக்குதல் மற்றும் மேலாண்மை செய்தல் உட்பட ஆதார் பதிவு மற்றும் சரிபார்ப்பு, தனிநபர்களுக்கு ஆதார் எண்களை வழங்குதல் மற்றும் சரிபார்ப்புகளை மேற்கொள்வதற்கான கொள்கைகள், நடைமுறைகள் மற்றும் அமைப்பு முறையை உருவாக்குதல் ஆகியவற்றுக்கு இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தான் பொறுப்பு ஆகும். அதுமட்டுமின்றி, தனிநபர்களின் அடையாளத் தகவல்கள் மற்றும் சரிபார்ப்பு ஆவணங்களை உறுதி செய்வதும் ஆணையத்தின் பணியாகும்.

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் பற்றி மேலும் அறிய, இந்த வலைத்தளத்தின் பின்னணி மற்றும் பார்க்கவும்.