ஆதார் பதிவு
ஆதார் பதிவு நடைமுறையில் பதிவு மையத்திற்கு செல்லுதல், பதிவுக்கான படிவத்தை நிரப்புதல், டெமோகிராபிக் மற்றும் உடற்கூறுகளை பதிவு செய்தல், அடையாள மற்றும் முகவரி சான்றுகளை தாக்கல் செய்தல், அதன்பின் பதிவு அடையாள எண்ணை உள்ளடக்கிய ஒப்புகைச் சீட்டை பெறுதல் ஆகியவையும் அடங்கும். ஆதார் பதிவின் முக்கிய அம்சங்கள் வருமாறு
- ஆதார் பதிவு இலவசம்
- இந்தியாவின் எந்த பகுதியிலும் உள்ள அங்கீகரிக்கப்பட்ட எந்த ஒரு ஆதார் பதிவு மையத்திற்கும் உங்கள் அடையாள மற்றும் முகவரி சான்றுடன் நீங்கள் செல்லலாம்
- இந்திய தனித்துவ அடையாள எண் ஆணைய நடைமுறையின்போது 18 வகையான அடையாள சான்றுகளும், 33 வகையான முகவரி சான்றுகளும் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. தேசிய அளவில் செல்லுபடியாகும் ஆவணங்களின் பட்டியலைக் காண இங்கு கிளிக் செய்யவும் புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுனர் உரிமம் ஆகியவை பொதுவான அடையாள மற்றும் முகவரி சான்றுகள் ஆகும்.
- பான் அட்டை மற்றும் அரசு அடையாள அட்டைகள் உள்ளிட்ட புகைப்பட அடையாள அட்டைகள் அடையாள சான்றுகளாக அனுமதிக்கப்பட்டவை ஆகும். முகவரி சான்றுகளுக்கான ஆவணங்களில் கடந்த 3 மாதங்களுக்கான குடிநீர் - மின்சாரம் - தொலைபேசிக் கட்டண ரசீதுகளும் அடங்கும்
- ஒருவேளை உங்களிடம் மேற்கூறப்பட்ட பொது ஆவணங்கள் இல்லையென்றால் கெசட்டட் அதிகாரி/ வட்டாட்சியரால் லெட்டர்ஹெட்டில் வழங்கப்படும் புகைப்படத்துடன் கூடிய அடையாளச் சான்றிதழும் அடையாளச் சான்றாக ஏற்றுக்கொள்ளப்படும். நாடாளுமன்ற அல்லது சட்டமன்ற உறுப்பினர்/கெசட்டட் அதிகாரி/ வட்டாட்சியரால் லெட்டர்ஹெட்டில் வழங்கப்படும் புகைப்படத்துடன் கூடிய அடையாளச் சான்றிதழ் அல்லது கிராமப்புரங்களில் ஊராட்சித் தலைவர்/ அவருக்கு இணையான அதிகாரம் கொண்டவரால் வழங்கப்படும் சான்றிதழ்களும் செல்லத்தக்க முகவரி சான்றாக ஏற்றுக்கொள்ளப்படும்
- ஒரு குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு தனியாக செல்லத்தக்க ஆவணங்கள் இல்லாவிட்டாலும், குடும்ப உரிமை ஆவணத்தில் (ரேஷன் அட்டை) அவரது பெயர் இருந்தால் அதைக் கொண்டே பதிவு செய்ய முடியும். இந்த நடைமுறையில் குடும்ப உரிமை ஆவணத்தில் தலைவராக குறிப்பிடப்பட்டிருப்பவர் உரிய அடையாள மற்றும் முகவரி சான்றுகளைக் காட்டி முதலில் பதிவு செய்து கொள்ளலாம். பின்னர் அவரது குடும்பத்தினர் பதிவு செய்ய வரும்போது அவர்களை குடும்பத் தலைவர் அறிமுகம் செய்யலாம். 8 வகையான ஆவணங்களை உறவு முறை சான்றுகளாக இந்திய தனித்துவ அடையாள எண் ஆணையம் ஏற்றுக்கொள்கிறது.தேசிய அளவில் செல்லுபடியாகும் ஆவணங்களின் பட்டியலைக் காண இங்கு கிளிக் செய்யவும்.
- எந்த ஒரு ஆவணமுமே இல்லாத சூழலில் பதிவு மையத்தில் உள்ள அறிமுகம் செய்பவர்களின் உதவியை வசிப்பாளர்கள் பெறலாம். அறிமுகம் செய்வோரின் பெயர்கள் பதிவாளரால் அறிவிக்கப்படுகின்றன. இது தொடர்பான விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட பதிவாளரின் தொடர்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளுங்கள்.
சுருக்கமாக கூற வேண்டுமானால்ஆதாருக்கு பதிவு செய்வதில் 3 விதமான அணுகுமுறைகள் உள்ளன:
ஆவணத்தின் அடிப்படையில்
- செல்லுபடியாகத் தக்க ஒர் அடையாளச் சான்றும், ஒரு முகவரி சான்றும் தாக்கல் செய்து பதிவு செய்யலாம்.
அறிமுகம் செய்பவர் அடிப்படையில்
- அடையாளச் சான்றும், முகவரிச் சான்றும் இல்லாத பட்சத்தில் அறிமுகம் செய்பவரின் சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம். அறிமுகம் செய்பவர் என்பவர் பதிவாளரால் நியமிக்கப்பட்டவர் ஆவார். இவர் செல்லுபடியாகத் தக்க ஆதார் எண் வைத்திருக்க வேண்டும்.
குடும்பத் தலைவர் அடிப்படையில்
- குடும்பத்தின் தலைவராக இருப்பவர் அவரது குடும்ப உறுப்பினர்களை, அவர்களுக்கிடையிலான உறவுமுறையை நிரூபிக்கும் சான்றுகளை தாக்கல் செய்து அறிமுகம் செய்யலாம்.
- திவு மையத்தில் உங்களின் தனிப்பட்ட விவரங்களை பதிவு படிவத்தில் தயவு செய்து நிரப்ப வேண்டும். பதிவு நடைமுறையின் ஓர் அங்கமாக உங்கள் புகைப்படம், கைரேகைகள், கருவிழிகள் ஆகியவை பதிவு செய்யப்படும். நீங்கள் அளித்த தகவல்கள் சரியாக பதியப்பட்டுள்ளதா? என்பதை நீங்கள் ஆய்வு செய்து, திருத்தங்கள் ஏதேனும் இருந்தால் பதிவின் போதே செய்து கொள்ளலாம். பதிவு நடைமுறையின் போது பதிவு செய்யப்பட்ட பிற தகவல்களுடன் தற்காலிக பதிவு எண்ணையும் கொண்ட ஒப்புகைச் சீட்டு வழங்கப்படும். பதிவு தகவல்களில் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால், பதிவு செய்த நேரத்திலிருந்து 96 மணி நேரத்திற்குள் ஒப்புகைச் சீட்டுடன் பதிவு மையத்திற்கு சென்று செய்து கொள்ளலாம்
- ஒரே ஒரு முறை நீங்கள் உங்கள் விவரங்களை பதிவு செய்தால் போதுமானது. இந்திய தனித்துவ அடையாள ஆணையம் கேட்டுக் கொள்ளாத பட்சத்தில், நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட முறை பதிவு செய்தால் அவை நிராகரிக்கப்படும்
- ஆதாருக்காக பதிவு செய்து, வசிப்பாளரின் தகவல் தொகுப்பு மத்திய அடையாள தகவல் தொகுப்புக்கு அனுப்பப்பட்ட பிறகு ஆதார் எண் உருவாக்கப்படுவதற்கு 60 முதல் 90 நாட்கள் ஆகும்
எங்கு பதிவு செய்வது?
அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்திய தனித்துவ அடையாள ஆணையம், இந்திய தலைமைப் பதிவாளர் அலுவலகம் ஆகியவற்றின் மூலம் ஆதார் பதிவு மேற்கொள்ளப்படுகிறது.அஸ்ஸாம் மற்றும் மேகாலயாவில் தேசிய மக்கள் தொகை பதிவேடு தயாரிக்கும் பணியுடன் ஆதார் பதிவு பணிகளையும் சேர்த்து இந்திய தலைமைப் பதிவாளர் அலுவலகம் மேற்கொண்டு வருகிறது.மற்ற அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த வசிப்பாளர்கள் ஆதார் பதிவு மையம்/ ஆதார் முகாம்கள் அல்லது ஏதேனும் நிரந்தர பதிவு முகாமில் மட்டும் பதிவு செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.