அங்கீகார சாதனங்கள் மற்றும் ஆவணங்கள்

சரிபார்ப்புக் கருவிகள்

ஆதார் சரிபார்ப்புக் கருவிகள் எனப்படுபவை சேவை வழங்கும் கருவிகள்/ மின்னணு கருவிகள் ஆகும். இவை தான் ஆதார் சரிபார்ப்பு சூழல் அமைப்பில் மிக முக்கியமான இணைப்பை ஏற்படுத்துகின்றன. இந்த கருவிகள் ஆதார் எண் வைத்திருப்பவர்களிடமிருந்து அவர்களின் தனி அடையாள தகவல்களை பெற்று, அவற்றிலிருந்து சரிபார்ப்புக்கு அனுப்புவதற்கான தகவல்களை தயாரித்து, சரிபார்ப்பு தகவல் தொகுப்புகளை சரிபார்ப்புக்காக அனுப்புதல் மற்றும் சரிபார்ப்பு முடிவுகளை பெறுதல் ஆகிய பணிகளை மேற்கொள்கின்றன. ஆதார் சரிபார்ப்பு கருவிகளுக்கான உதாரணங்களில் மேசை கணினிகள், மடி கணினிகள், விற்பனை நடைபெறும் இடங்களில் வைக்கப்பட்டுள்ள கியோஸ்க்குகள், / எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லும் வசதி கொண்ட கையடக்க கருவிகள் (மைக்ரோ ஏ.டி.எம்கள்) மற்றும் டேப்லட்டுகள் அடங்கும். வேண்டுகோள் விடுக்கும் ஒவ்வொரு நிறுவனங்களின் தேவைகளுக்கு ஏற்ப, பல்வேறு பயன்பாடுகளுக்கு இந்த கருவிகள் பயன்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய செயல்பாடுகள்

சரிபார்ப்புக் கருவிகள் கீழ்க்கண்ட முக்கியப் பணிகளை மேற்கொள்கின்றன:

 • சரிபார்ப்புக் கருவிகளில் உள்ள டொமைன்/ கிளையண்ட் பயன்பாடு மூலம் ஆதார் எண் வைத்திருப்பவர்களிடமிருந்து அவர்களின் தனி அடையாள தகவல்களை சேகரிக்கின்றன.
 • பெறப்பட்ட தகவல்கள் முழுமையாக உள்ளனவா? பொருத்தமானவையாக உள்ளனவா? என்பதற்கான அடிப்படை சரிபார்ப்புகளை செய்தல்
 • சரிபார்ப்பு தகவல் பைகளை அனுப்புதல் மற்றும் சரிபார்ப்பு முடிவுகளைப் பெறுதல்

2016ஆம் ஆண்டு ஆதார் சட்டம் மற்றும் அதன் விதிமுறைகளுக்கு இணங்க,

ஆதார் சரிபார்ப்புக் கருவிகளை வேண்டுகோள்விடுக்கும் நிறுவனங்கள் (AUA/KUA). இயக்க முறைக்கு ஏற்றவாறு இந்தக் கருவிகள் தானாக இயங்கும் கருவிகள் மற்றும் ஆபரேட்டர் உதவியுடன் இயங்கும் கருவிகளாக வகைப்படுத்தப்படுகின்றன.

தானாக இயக்கும் கருவிகளில் ஆதார் எண்தாரர்கள் யாருடைய உதவியும் இன்றி ஆதார் சரிபார்ப்பு பரிமாற்றங்களை தாங்களாகவே செய்துகொள்ளமுடியும்.

ஆபரேட்டர் உதவியுடன் இயங்கும் கருவிகளில் ஆதார் சரிபார்ப்பு பரிமாற்றங்களை ஆபரேட்டரின் உதவியை கேட்டுப்பெற்றுதான் ஆதார் எண்தாரர்களால் செய்யமுடியும்.

விதிவிலக்கான சூழல்களை கையாளும் வசதி

கருவிப் பயன்பாடு என்பது, உடற்கூறு அம்சங்களின் அடிப்படையிலான சரிபார்ப்பு முறையின்போது, தவறுதலாக நிராகரிக்கப்பட்ட நேர்மையான ஆதார் எண்தாரர்களுக்கு சேவை வழங்கும் வசதியைக் கொண்டிருக்க வேண்டும். நெட்வொர்க் இல்லாமை, கருவி பழுதுபடுதல் போன்ற தொழில்நுட்ப இடையூறுகள் உள்ள நேரத்திலும், தொடர்ந்து சேவை வழங்குவதற்கான நடவடிக்கைகள் செய்யப்படவேண்டும். தொழில்நுட்பக் குறைபாடுகள் காரணமாக, எந்தவொரு நேரத்திலும் ஆதார் எண்தாரர்களுக்கு சேவை மறுக்கப்படக்கூடாது. விதிவிலக்கான சூழல்களை கையாள்வதற்கான அமைப்புகளில், மோசடி முயற்சிகளை தடுக்கும் வகையில், வேண்டுகோள்களை அளிக்கவும், வேண்டுகோள்களை கண்காணிக்கவும், நிராகரிக்க முடியாத அம்சங்கள் இருக்க வேண்டும்.

கட்டாயப் பாதுகாப்புத் தேவைகள்

கட்டாயப் பாதுகாப்புத் தேவைகள் குறித்த விவரங்களுக்கு 2016ஆம் ஆண்டின் ஆதார் சட்டம் மற்றும் அதன் விதிமுறைகளை பார்க்கவும்.

கருவியை இயக்குபவருக்கான பயிற்சி

பெருமளவிலான அடையாள சரிபார்ப்புக் கருவிகள், குறிப்பாக உடற்கூறு அடிப்படையில் அடையாள சரிபார்ப்பு வேண்டுகோள்களை வழங்கும் கருவிகள், ஆபரேட்டர் உதவியுடன் இயக்கப்படும் கருவிகளாகும். இத்தகைய கருவிகளை இயக்கும் ஆபரேட்டர்கள், ஆதார் சரிபார்ப்பு பரிமாற்றங்களை செய்வதற்கும், வசிப்பாளர்களின் வினாக்களுக்கு சரியான முறையில் விடையளிப்பதற்கும் போதிய பயிற்சி பெற்றிருக்கிறார்களா? என்பதை சரிபார்ப்புப் பயனாளர் முகமைகள் உறுதி செய்யவேண்டும்.

ஆபரேட்டர்களின் பயிற்சியில் இடம்பெறவேண்டிய முக்கிய அம்சங்கள்:

 • உடற்கூறு சரிபார்ப்புக் கருவிகளின் பயன்பாடுகள் மற்றும் நல்ல தரமான உடற்கூறுகளை பதிவு செய்தலில் கடைபிடிக்கவேண்டியவை மற்றும் கடைபிடிக்கக்கூடாதவை.
 • சிறந்த விரல்ரேகை கண்டுபிடிப்புக் கருவியின் பயன்பாடு, ஆதார் எண்தாரர்களை சரிபார்ப்புக்கு உட்படுத்தும் நடைமுறை, அடுத்தக்கட்டங்களுக்கு ஆதார் எண்தாரர்களுக்கு வழிகாட்டுதல்.
 • விதிவிலக்கான சூழல்களை கையாளும் நடைமுறைகள், தொழில்நுட்ப கட்டுப்பாடுகள் காரணமாக, ஆதார் எண்தாரர்களுக்கு சேவையை மறுக்காமல் இருப்பதை உறுதி செய்தல்.
 • ஆதார் எண்தாரர்களுடன் சரியான முறையில் உரையாடுதல்
 • அடிப்படை சிக்கல் தீர்ப்பு நடவடிக்கைகள், சரிபார்ப்பு பயனாளர் முகமைகளின் கருவி / பயன்பாட்டு ஆதரவுக் குழுவின் தொடர்பு விவரங்கள்

கட்டாய பாதுகாப்பு தேவைகள்

 • ஆதார் அடையாள சரிபார்ப்பின்போது படம்பிடிக்கப்படும் தனிநபர் அடையாள முத்திரை, பதிவின்மீது ஒரு குறியீடாக பொறிக்கப்படவேண்டும். . அது நெட்வொர்க்கில் தெளிவான முறையில் அனுப்பப்படக்கூடாது.
 • குறியீடு செய்யப்பட்ட தனிநபர் அடையாள முத்திரை, குறுகிய கால அடையாள சரிபார்ப்புக்காக வைத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படாத பட்சத்தில், அதை சேமித்து வைக்கக்கூடாது.
 • ஆதார் அடையாள சரிபார்ப்புக்காக எடுக்கப்பட்ட உடற்கூறு பதிவுகள் மற்றும் ஒருமுறை கடவுச்சொல் பயன்பாட்டு விவரங்கள் தகவல் தொகுப்பிலோ அல்லது நிரந்தர சேமிப்புப் பகுதியிலோ சேமித்து வைக்கப்படக்கூடாது.
 • ஆபரேட்டர் உதவியுடன் செயல்படும் கருவிகளாக இருந்தால், கடவுச் சொல் ஆதார் சரிபார்ப்பு உள்ளிட்டவற்றின் மூலம், ஆபரேட்டர்களுக்கு அடையாள சரிபார்ப்பு செய்யப்படவேண்டும்.