சோதனை மற்றும் சான்றளித்தல்

முன்னுரை

இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் நோக்கம் என்பது இந்தியாவில் உள்ள அனைத்து வசிப்பாளர்களுக்கும் தனித்துவ அடையாள எண்ணை வழங்குவது ஆகும். வசிப்பாளர்களின் தகவல்களை வெற்றிகரமாக கட்டமைக்கும் பரவலான மற்றும் கூட்டு முயற்சிக்கு ஒட்டுமொத்த பதிவாளர் சூழல் அமைப்பில் ஒரே மாதிரியான பதிவு நடைமுறை கடைபிடிக்கப்படவேண்டியதுமிகவும் அவசியமாகும். இத்தகைய தன்மையை எட்ட, கள அளவில் பதிவு நடைமுறையில் ஈடுபட்டுள்ள குழுவினர் அனைவருக்கும் பதிவு நடைமுறை குறித்த முழுமையான பயிற்சி அளிக்கப்படவேண்டியது அவசியமாகும்.

இந்தத் தேவையை நிறைவேற்றும் வகையில், இந்திய தனித்துவ அடையாள ஆணையம் விரிவான பயிற்சி வழங்கும் முறை மற்றும் பயிற்சி உள்ளடக்கங்களை அனைத்து பங்குதாரர்களுக்கும் உருவாக்கியுள்ளது. பயிற்சி மட்டுமின்றி, பதிவுப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ள நபர்களின் திறமை மற்றும் வல்லமையை அளவிடுவதற்கான முறை உருவாக்கப்படவேண்டும் என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் நம்புகிறது. இதை கருத்தில் கொண்டு, பதிவுப் பணியாளர்கள் தரம் சார்ந்த விதிகளை கடைபிடிப்பதை உறுதி செய்யும் வகையில், கட்டாய சோதனை மற்றும் சான்றளிக்கும் முறையை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் பரிந்துரைத்துள்ளது

  • பதிவு மேற்பார்வையாளர் / ஆபரேட்டர்
  • குழந்தை பதிவு லைட் கிளையண்ட் ஆபரேட்டர்

பயிற்சி வழங்கல்

ஆதார் பதிவில் தரத்தை உறுதி செய்யவும், பதிவு சூழல் அமைப்பில் இடம்பெறும் அனைத்து நடைமுறைகள் குறித்து தெரிந்துகொள்ளவும் வசதியாக பதிவுப் பணியாளர்களுக்கு பதிவாளர்கள் மற்றும் பதிவு முகமைகள் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் மண்டல அலுவலகங்கள் தேவை அடிப்படையில் வகுப்பறை பயிற்சி, தலைமை பயிற்சியாளருக்கான பயிற்சி, பயிற்சி முகமை பணியாளர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு முறைகளில் பயிற்சி அளிக்கின்றன. அதிக எண்ணிக்கையிலான பயிற்சிப் பணியாளர்களை உருவாக்கும் நோக்குடன் மெகா பயிற்சி முகாம்களை மண்டல அலுவலகங்கள் நடத்துகின்றன

பஞ்சாயத்து ராஜ் அமைப்புகள் / நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரிகள், மாவட்ட அளவிலான அதிகாரிகள், அறிமுகம் செய்பவர் / சரிபார்ப்பவர் என ஆதார் பதிவு நடைமுறையில் மேலும் பல பங்குதாரர்கள் உள்ளனர். ஆதார் திட்டம் மற்றும் ஆதார் பதிவு நடைமுறையில் அவர்களின் பங்கு என்ன என்பது குறித்து அவர்களுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டியுள்ளது. இதற்காக இந்த பங்குதாரர்களுக்கு பல பயிற்சி நிகழ்ச்சிகளை மண்டல அலுவலகங்கள் நடத்தும்.

தலைமை பயிற்சியாளருக்கான பயிற்சி / பயிற்சியாளர்களுக்கு பயிற்சி அளித்தல்

தலைமை பயிற்சியாளருக்கான பயிற்சி அல்லது பயிற்சியாளர்களுக்கு பயிற்சி அளித்தல் என்பது தலைமை பயிற்சியாளருக்கு பயிற்சி அளிப்பதற்கான நிகழ்ச்சியாகும். இவ்வாறு பயிற்சி பெற்றவர்கள் தங்களுக்கு கீழ் உள்ள பயிற்சியாளர்களுக்கு அவர்கள் சார்ந்த துறைகளில் பயிற்சிகளை வழங்குவர். பதிவாளர், பதிவு முகமைகள், கிராம ஊராட்சி உறுப்பினர்கள், நகர உள்ளாட்சி உறுப்பினர்கள், மாவட்ட அளவிலான அதிகாரிகள் ஆகியோர் தங்களது துறை அல்லது அமைப்பிலிருந்து தலைமைப் பயிற்சியாளரை நியமிப்பார்கள் அல்லது ஆதார் பதிவு சூழல் அமைப்பில் அவ்வப்போது மேற்கொள்ளப்படும் மாற்றங்கள் குறித்து விவரங்களை அறிந்துகொள்வதற்காக சிறப்புப் பயிற்சி முகமைகளின் சேவையைப் பயன்படுத்திக்கொள்வார்கள். நவீன பயிற்சி நிறுவனங்களிலிருந்து தலைமைப் பயிற்சியாளர்களை மண்டல அலுவலகங்கள் அடையாளம் காணும். பல்வேறு அமைப்புகளால் நியமிக்கப்படும் தலைமைப் பயிற்சியாளர்கள் தவிர, SSAs, PSAs மற்றும்ADGs போன்ற சொந்த ஆதாரங்களில் இருந்தும், தலைமைப் பயிற்சியாளர்களை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அடையாளம் காணும்.

பயிற்சியாளர்கள் உள்ளூர் மொழியில் வல்லமை பெற்றிருப்பதையும், உள்ளூர் அளவிலான களப்பயிற்சி குறித்து அறிந்திருப்பதையும் உறுதி செய்வதற்காக அவர்களுக்கு பயிற்சி அளிக்கும் பொறுப்பு சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் ஒப்படைக்கப்படுகிறது. இந்தப் பயிற்சிகளுக்கான காலங்கள் ஓரிரு நாட்கள் மட்டுமே. இதற்காக அடையாளம் காணப்பட்ட அனைவருக்கும் ஆதார் நடைமுறை மற்றும் அமைப்பு குறித்த அடிப்படை அறிவு ஏற்கெனவே இருக்கும் என்பதால், பயிற்சிக்காலம் குறைவாக உள்ளது. அதிக எண்ணிக்கையிலான பயிற்சியாளர்களுக்கு பயிற்சி வழங்குவதற்கான திட்டங்களையும், புத்தாக்கப் பயிற்சிகளையும் விரைவாக வழங்கவேண்டும் என்பதால், தலைமை பயிற்சியாளர்களுக்கான பயிற்சிகள் வகுப்பறையிலும் கணினி அடிப்படையிலான பயிற்சியாகவும் வழங்கப்படும்.

பயிற்சியாளர்களுக்கான பயிற்சியில் பயிற்சிபெற்ற தலைமை பயிற்சியாளர்கள் மண்டல அலுவலகங்களிலும் பதிவாளர்களிடமும், பயிற்சி முகமைகளிடமும் அரசுத் துறைகளிலும் இருப்பார்கள். இவர்கள் தாங்கள் சார்ந்த துறைகள் அல்லது அமைப்புகளில் உள்ள பிறபங்குதாரர்களுக்கு பயிற்சி அளிப்பார்கள்.

பதிவு முகமைப் பணியாளர்களுக்கு நோக்கநிலை / புத்தாக்கப் பயிற்சித் திட்டம்

நோக்கநிலை / புத்தாக்கப் பயிற்சித் திட்டம் என்பது மேற்பார்வையாளர்கள் அல்லது ஆபரேட்டர்கள் அல்லது குழந்தைகள் பதிவு லைட் கிளையன்ட் ஆபரேட்டர்கள் போன்ற பதிவு நடைமுறையில் ஈடுபட்டுள்ள பதிவு முகமைப் பணியாளர்களுக்கான பயிற்சி ஆகும். இந்தத் திட்டங்கள் ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கானது என்பதால், அப்பிரிவினர் அவர்கள் சார்ந்த துறையில் வலிமையான அடிப்படை அறிவு கொண்டவர்களாக இருப்பார்கள் என்பதை கருத்தில் கொண்டு இதற்கான பயிற்சிக்காலம் ஒரு நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சிகள் வகுப்பறை முறையில் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு மண்டல அலுவலகத்தாலும் ஒரு காலாண்டுக்கு ஒருமுறை இந்தப் பயிற்சி வழங்கப்படும்.

மண்டல அலுவலக வளாகம் அல்லது மாநிலப் பயிற்சி நிறுவனங்கள் போன்ற இடங்களில் இந்தப் பயிற்சித்திட்டங்கள் நடத்தப்படும். தலைமை பயிற்சியாளர்கள் புத்தாக்கப் பயிற்சி வழங்குவதற்கான வள மனிதராக செயல்படுவார். இந்தப் பயிற்சிக்கான உள்ளடக்கங்கள் பதிவுத் துறையால் தயாரிக்கப்படும். பதிவு நடைமுறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் நடைமுறை மாற்றங்களை அடிப்படையாகக் கொண்டு உள்ளடக்கம் தயாரிக்கப்படும். இந்தப் பயிற்சியில் பங்கேற்றவர்களின் கற்றல் திறனை மதிப்பிடும் நோக்குடனும் இந்தப் பயிற்சியின் முடிவில் ஒரு தேர்வு நடத்தப்படும்.

முக்கிய குறிப்பு:

1.ஆதார் மேற்பார்வையாளர் / ஆபரேட்டர் மற்றும் குழந்தைகள் பதிவு லைட் கிளையண்ட் ஆபரேட்டர் (CELC) ஆகியவற்றை எடுத்துக் கொள்வதற்கான புதிய தேர்வு அமைப்பு மற்றும் வினா வங்கி 04.02.2019 இல் இருந்து பொருந்தும். தேர்வு மற்றும் சான்றிதழ் ஏஜென்சி (எம் / வி NSEIT லிமிடெட்) நடத்திய அனைத்து சான்றிதழ் தேர்வுகள் புதிய முறை படி இருக்கும்.சான்றிதழ் தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைத்து தேர்வாளர்களும் புதியதேர்வு கட்டமைப்பு, வினா வங்கி (கள்)04.02.2019 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.சுய ஆய்வுக்காக கீழே கொடுக்கப்பட்ட அட்டவணையில் தொடர்புடைய (Leaner)லர்னர் வழிகாட்டிகள் மற்றும் சான்றிதழ் தேர்வுக்கு தயார் செய்தல்.

2.சரிபார்ப்பு நோக்கத்திற்காக, தங்களின் மின்னணு-ஆதாரின் சமீபத்திய நகல் (ஜனவரி 1, ஜனவரிக்குப் பின் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்) www.eaadhaar.uidai.gov.in ல் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.தேர்வு தேதியில் NSEIT லிமிடெட் தேர்வு மையத்திற்கு அதே கருப்பு / வெள்ளை / வண்ண அச்சு எடுத்து செல்லவும்.

3.இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் புதிய தேர்வு மற்றும் சான்றளித்தல் கொள்கையின்படி, விண்ணப்பதாரர்கள் தேர்வுக் கட்டணத்தை செலுத்திய நாளில் இருந்து 6 நாட்களுக்குள் தேர்வு எழுத வேண்டும். அவ்வாறு எழுதாதவர்கள் தேர்வுக்கட்டணத்தை இழந்துவிடுவார்கள். அந்தக் கட்டணத்தின் அடிப்படையில் அவர்கள் அதன் பிறகு தேர்வு எழுத முடியாது.

4. குழந்தைகள் பதிவு லைட் கிளையன்ட் ஆபரேட்டர் பணிக்கான சான்றிதழ் பெற்றவர்கள் அந்தப் பணிக்கான மென்பொருளில் மட்டுமே பணியாற்ற அனுமதிக்கப்படுவார்கள். அவர்கள் வேறுவிதமான பதிவுப் பணியில் உதாரணமாக, .ECMPமென்பொருளில் ஆபரேட்டர் / மேற்பார்வையாளராக பணியாற்ற இயலாது. எனினும், ஆபரேட்டர் / மேற்பார்வையாளராக சான்றிதழ் பெற்றவர்கள் ECMP, குழந்தைகள் பதிவு லைட் கிளையன்ட் ஆபரேட்டர் ஆகிய இரு மென்பொருள்களிலும் பணியாற்ற அனுமதிக்கப்படுவார்கள். குழந்தைகள் பதிவு லைட் கிளையன்ட் மென்பொருள் ஆபரேட்டராக பணியாற்றுவதற்கான குறைந்தபட்ச கல்வித் தகுதி 12ஆம் வகுப்பு தேர்ச்சி ஆகும். ஒருவேளை விண்ணப்பதாரர்கள் அங்கன்வாடி / ஆஷா பணியாளர்களாக இருந்தால், அவர்களுக்கு மட்டும் குழந்தைகள் பதிவு லைட் கிளையன்ட் ஆபரேட்டர் பணிக்கான கல்வித் தகுதி 10ஆம் வகுப்பு தேர்ச்சி போதுமானது.

5ஆதார் பதிவு மற்றும் புதுப்பிப்பு செய்ய சான்றிதழ் ஒரு கட்டாயத் தேவையாகும்.UIDAI எந்த சான்றளிக்கப்பட்ட பணியாளர்களுடனும் நேரடியாக பணியாற்றவில்லை, அனைத்து சான்றளிக்கப்பட்ட பணியாளர்களும் செயல்பாட்டில் உள்ள ஆதார்பதிவு நிறுவனத்தை அணுக வேண்டும்.

பதிவுப் பணியாளர்களுக்கு தேர்வு மற்றும் சான்றளித்தல்

இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் உருவாக்கப்பட்ட தர அம்சங்களின் அடிப்படையில் பதிவு மற்றும் தகவல் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்வதற்கான தனி நபர்களின் திறமையை மதிப்பிடுவதற்கான ஆன்லைன் தேர்வுகளை நடத்துவதற்கான தேர்வு மற்றும் சான்றளித்தல் நிறுவனமாக NSE.IT என்ற நிறுவனத்தை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் நியமித்திருக்கிறது.

ஆதார் பதிவு மற்றும் தகவல் மேம்பாட்டுப் பணிகளின் முக்கியமான அம்சங்களை புரிந்துகொள்வதற்கும், பதிவுப் பணியாளர்களுக்கு நோக்கநிலை / புத்தாக்கப் பயிற்சி அளிப்பதற்கும் தேவையான விரிவான பயிற்சித் தொகுதிகளை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் வழங்கியுள்ளது. ஆதார் தகவல் மேம்பாடு மற்றும் குழந்தைகள் பதிவு லைட் கிளையன்ட் குறித்த பயிற்சிக்காக தனி பயிற்சித் தொகுதிகள் குறிப்பிட்ட பயிற்சி தேவைகளுக்கு ஏற்றவகையில் பல்வேறு வடிவங்களில் உருவாக்கப்பட்டுள்ளன. ஆதார் பதிவு மற்றும் தகவல் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்வதில் விரும்பம் உள்ளவர்கள் பதிவு ஆபரேட்டர், மேற்பார்வையாளர் / குழந்தைகள் பதிவு லைட் கிளையன்ட் ஆபரேட்டர்களாக சான்றிதழ் பெறவேண்டும். இதற்காக தேர்வு மற்றும் சான்றளித்தல் முகமையால் நடத்தப்படும் சரியான விடையை தேர்வு செய்யும் முறையிலான ஆன்லைன் தேர்வுக்கு தயாராவதற்காக தாங்களே படித்து தெரிந்துகொள்ளும் வகையில் வினா வங்கியை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தயாரித்து இணையதளத்தில் வெளியிட்டிருக்கிறது.

தேர்வுக்கு தயாரான பிறகு தேர்வு எழுத விரும்புபவர்கள் NSE.IT இணையதளத்திற்குச் சென்று பதிவு நடைமுறை, நகரம் வாரியான பயிற்சி மையங்கள், வங்கி செலான் விவரங்கள், தேர்வு எழுதுவதற்கான நாட்கள் ஆகியவை குறித்த விவரங்களை தெரிந்துகொள்ளலாம். தேர்வுக் கட்டணமாக புதிதாக தேர்வு எழுதுபவர்கள் 365 ரூபாயையும், மறுதேர்வு எழுதுபவர்கள் அதற்கான தேர்வுக் கட்டணமாக 200 ரூபாயையும் வங்கிச் செலான் மூலம் ஏதேனும் ஒரு வங்கியில் செலுத்தலாம். தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு ஆன்லைன் தேர்வு நடைபெற்ற அதே நாளில் அதே தேர்வு மையத்தில் சான்றிதழ் வழங்கப்படும்.

"பதிவு, விண்ணப்ப படிவத்தை சமர்ப்பித்தல், தேர்வு கட்டணம், தேர்வு மையம் / தேர்வு அட்டவணை மற்றும் சான்றிதழ் விண்ணப்பம்" தொடர்பான எந்த கேள்விகளுக்கும், தேர்வாளர்கள்022-42706500 ஐ தொடர்பு கொள்ளலாம் அல்லது அவர்களின் கேள்விகளுக்குThis email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. இல் அனுப்பலாம்.

சான்றிதழ் பெற்ற பின் பணியில் ஈடுபடுத்திக் கொள்வதில் ஏதேனும் சிக்கல்கள் இருந்தால், இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் தொழில்நுட்ப உதவியை 080&23099400 என்ற தொலைபேசி எண்ணிலோ, அல்லது This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விசாரணைகளை அனுப்பியோ பதில் பெறலாம்.

பயிற்சிமற்றும்தேர்வு உள்ளடக்கம்

ஆதார் பதிவு சார்ந்த பணிகளுக்கு ஆயத்தமாக விரும்புவோருக்கான சான்றளித்தல் தேர்வுக்கான பயிற்சி மற்றும் தேர்வுக்கான உள்ளடக்கங்கள், பதிவு சூழல் அமைப்பில் சம்பந்தப்பட்ட பங்குதாரர்கள் அவர்களின் பணிகள், பொறுப்புகள் மற்றும் ஆதார் பதிவு மற்றும் தகவல் மேம்பாடு சம்பந்தப்பட்ட மற்ற அம்சங்கள் குறித்த விவரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.