உடற்கூறு கருவிகள்
ஆதார் எண் வைத்திருப்பவர்களின் உடற்கூறுகளை, உதாரணமாக கைவிரல் ரேகைகள்/ கருவிழிகள்/ இரண்டையும் பதிவு செய்ய பயன்படுத்தப்படும் கருவிகள் உடற்கூறு பதிவுக் கருவிகள் என்றழைக்கப்படும். இந்த கருவிகளை தனித்து இயங்கும் கருவிகள், ஒருங்கிணைந்து இயங்கும் கருவிகள் என இருவகையாகப் பிரிக்கலாம்.
தனித்து இயங்கும் கருவிகள்: கைரேகைப் பதிவு, கருவிழிப் பதிவு ஆகியவற்றுக்கான உடற்கூறு பதிவு கருவிகள் தனித்து இயங்கும் கருவிகள் என்று அழைக்கப்படுகின்றன. கணினிகள்/ மடிக் கணினிகள்/ மைக்ரோ ஏ.டி.எம் போன்ற இயக்கும் கருவிகளுடன் இணைக்க இணைப்பு வசதி தேவைப்படுவதால் இவை தனித்து இயங்கும் கருவிகள் என்று அழைக்கப்படுகின்றன.
ஒருங்கிணைந்து இயங்கும் கருவிகள்: தொலையுணர்வு சென்சார் கருவிகள் மூலம் இணைக்கப்பட்ட செல்பேசிகள்/ டேப்லட் போன்றவை ஒருங்கிணைந்த கருவிகள் என்று அழைக்கப்படுகின்றன.
உடற்கூறு பதிவுக்காக பொருத்தப்படும் கருவிகளில் கீழ்க்கண்டவையும் அடங்கும்:
- மைக்ரோ ஏ.டி-.எம்.கள், வருகைப் பதிவுக் கருவிகள் போன்ற கையடக்கக் கருவிகள்
- கணினியு-டன் இணைக்கப்பட்ட யு.எஸ்.பி. கருவிகள்
- பயோமெட்ரிக் சென்சாருடன் கூடிய செல்பேசி
- ஏ.டி.எம்.கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தின்படி, வேலைக்கு வருவதற்கான மையம் போன்ற மையங்கள்.
சரிபார்ப்பு சேவை தேவைப்படும் அமைப்புகள் தங்களின் சேவை வழங்குவதற்கான தேவைகள், சேவையின் தன்மை, பரிமாற்றம் செய்யப்படும் சேவையின் அளவு, விரும்பத்தக்க துல்லிய அளவீடுகள், சேவை வழங்கலுடன் தொடர்புடைய பாதிப்பு அம்சங்கள் ஆகியவற்றைப் பொறுத்து, எந்த அடிப்படையிலான உடற்கூறு சரிபார்ப்பு சேவை (கைரேகைகள்/ கருவிழி) தேவை என்பதை முடிவு செய்யும். கைரேகை மூலம் உடற்கூறு சரிபார்க்கப்படவேண்டுமா, கருவிழி மூலம் சரிபார்க்கப்படவேண்டுமா, உடற்கூறுகள் மற்றும் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய கடவுச்சொல் உள்ளிட்ட பல்வேறு வகைகள் மூலம் சரிபார்க்கப்படவேண்டுமா என்பதை வேண்டுகோள் விடுக்கும் அமைப்புகள் முடிவு செய்த பின்னர் அதற்கான உடற்கூறு கருவிகளின் (மேலே உள்ள இணையதள முகவரி இணைப்பில் அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டிருப்பதைபோல) பட்டியலைப் பெறலாம். அப்பட்டியலிலிருந்து உடற்கூறு கருவிகளை கொள்முதல் செய்யமுடியும்.
அனைத்து சரிபார்ப்புச் சூழல் பங்குதாரர்களும் பதிவு செய்யப்பட்ட கருவிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பது இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் விதியாகும்.
பதிவு செய்யப்பட்ட கருவிகள் எனப்படுபவை, குறியாக்க விசை மேலாண்மைக்காக ஆதார் அமைப்புடன் பதிவு செய்யப்பட்ட கருவிகளாகும். ஆதார் சரிபார்ப்பு சர்வர்கள் இவற்றை தனிப்பட்ட முறையில் அடையாளம் கண்டு மதிப்பிடுவதுடன், பதிவு செய்யப்பட்ட ஒவ்வொரு கருவியின் குறியாக்க விசைகளையும் மேலாண்மை செய்யும்.
- கருவிகளை அடையாளம் காணுதல்: ஒவ்வொரு சென்சார் கருவியிலும் தனித்துவமான அடையாளம் காணும் வசதி இருக்கும். இதன் மூலம், கருவிகளின் அடையாளத்தைச் சரிபார்த்தல், கருவிகளைக் கண்டறிதல், பகுப்பாய்வுக்கு உட்படுத்துதல், மோசடி மேலாண்மை ஆகிய பணிகளை மேற்கொள்ள முடியும்.
- சேமித்து வைக்கப்பட்டுள்ள உடற்கூறு பதிவுகள் பயன்படுத்தப்படுவதைத் தடுத்தல்: ஒவ்வொரு உடற்கூறு பதிவும் ஆய்வு செய்யப்பட்டு, பாதுகாப்பான மண்டலத்தில் குறியாக்கம் செய்து வைக்கப்படுகிறது. இதன் மூலம் குறியாக்கம் செய்யப்படாத உடற்கூறு பதிவுகள், சென்சாரில் இருந்து இயக்கும் கருவிக்கு அனுப்பப்படுவது தடுக்கப்படுகிறது.
உடற்கூறு பதிவு கருவிகளுக்கான சான்றளித்தல்:
சரிபார்ப்புக்காக பயன்படுத்தப்படும் அனைத்து உடற்கூறு பதிவு கருவிகளும் ஆணையத்தால் அவ்வப்போது வெளீயிடப்படும் தர வரையறை மற்றும் தேவைக்கு ஏற்றவாறு சான்றளிக்கப்பட்டிருக்க வேண்டும்.