ஒரு குடியிருப்பாளர் எவ்வாறு விஐடி பெறுகிறார்?

ஆதார் எண் வைத்திருப்பவரால் மட்டுமே விஐடி உருவாக்க முடியும். அவர்கள் தங்கள் விஐடியை அவ்வப்போது மாற்றலாம் (புதிய விஐடியை உருவாக்கலாம்). எந்த நேரத்திலும் ஒரு ஆதார் எண்ணுக்கு ஒரு விஐடி மட்டுமே செல்லுபடியாகும். ஆதார் எண் வைத்திருப்பவர்களுக்கு விஐடி உருவாக்குவதற்கும், மறந்துவிட்டால் விஐடி-யை மீட்டெடுப்பதற்கும், விஐடி-யை மாற்றுவதற்கும் யுஐடிஏஐ பல்வேறு விருப்பத்தேர்வு வழங்குகிறது.இந்த விருப்பத்தேர்வு UIDAI இன் இணையதளம் (www.myaadhaar.uidai.gov.in), eAadhaar பதிவிறக்கம், mAadhaar மொபைல் செயலி போன்றவற்றின் மூலம் கிடைக்கும்.
ஆதார் ஹெல்ப்லைன் எண் 1947 க்கு SMS அனுப்புவதன் மூலமும் VID ஐ உருவாக்க முடியும். குடியிருப்பாளர் “GVIDஆதார் எண்ணின் கடைசி 4 இலக்கங்கள்” என்று தட்டச்சு செய்து பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண் மூலம் 1947 க்கு அனுப்ப வேண்டும்.