பதிவாளர்என்பவர்யார்?

பதிவாளர்எனப்படுபவர்தனிநபர்களைபதிவுசெய்யும்பணிக்காகஇந்தியதனித்துவஅடையாளஆணையத்தால்அங்கீகரிக்கப்பட்டஅல்லதுஅதிகாரம்அளிக்கப்பட்டஅமைப்புஆகும். மாநில அரசுகள் / யூனியன் பிரதேச அரசுகளின் துறைகள், அல்லது முகமைகள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தங்களின் திட்டங்கள், செயல்பாடுகள் அல்லது இயக்கங்களுக்காக வசிப்பாளர்களுடன் சந்திக்கக்கூடிய அமைப்புகளே பதிவாளராக செயல்படும். ஊரக வளர்ச்சித்துறை (வேலைவாய்ப்பு உறுதித்திட்டப் பணிகளுக்கு) குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரத்துறை (இலக்கு நிர்ணயிக்கப்பட்ட பொது விநியோகத்திட்டத்திற்கு) இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் போன்ற காப்பீட்டு நிறுவனங்கள், வங்கிகள் ஆகியவை பதிவாளருக்கு சில உதாரணங்கள் ஆகும்.

பதிவாளர்கள், வசிப்பாளர்களின் டிமோகிராபிக் மற்றும் உடற்கூறு தகவல்களை நேரடியாகவோ அல்லது பதிவு முகமைகள் மூலமாகவோ சேகரிப்பார்கள். ஒட்டுமொத்த ஆதார் பதிவு நடைமுறையையும் செயல்படுத்துவதற்கு தரமுறைகள், விதிமுறைகள், நடைமுறைகள், வழிகாட்டுதல்கள், தொழில்நுட்ப அமைப்புகள் உள்ளிட்டவற்றை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் உருவாக்கியிருக்கிறது. இவற்றை பதிவாளர்கள் கடைபிடிப்பார்கள். பதிவு நடைமுறைக்கு உதவுவதற்காக இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் உருவாக்கப்பட்ட சூழல் அமைப்பை பதிவாளர்கள் விரைவுபடுத்தலாம்.