பதிவு முகவர் (EA) என்பவர் யார்?

பதிவு முகவர் என்பவர் தனித்துவ அடையாள பதிவுக்காக டிமோகிராபிக் மற்றும் உடற்கூறு தகவல்களை சேகரிப்பதற்காக பதிவாளர்களால் நியமிக்கப்பட்ட அமைப்புகள் ஆகும். பதிவு முகமைகள் பதிவாளர்களால் இப்பணிக்கு நியமிக்கப்படுவதற்காக இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் பட்டியலில் தொடர்ந்து இடம்பெற்றிருக்க வேண்டியது அவசியம் ஆகும். அங்கீகரிக்கப்பட்ட பட்டியலில் இல்லாத முகமைகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டால், அவை அங்கீகரிக்கப்பட்ட பட்டியலில் உள்ள முகமைகளுக்கான விதிமுறைகளை கடைபிடிப்பதை உறுதி செய்யவேண்டும்.