பதிவுப் பணியைத் தொடங்குவதற்கு முன்பாக பதிவு முகமைகள் கட்டாயமாக மேற்கொள்ள வேண்டிய ஆயத்தப்பணிகள் என்னென்ன?


பதிவு முகமைகளின் ஆயத்தப் பணிகள்

பதிவு முகமைகள் தங்களின் திட்ட&தொழில்நுட்ப மேலாளர்கள் யார் என்பதை அடையாளம் காண வேண்டும். இவர்கள் தான் பொறுப்புத்துறை தலைவர்/பதிவாளர் துறை தலைமையிலான கூட்டு நடவடிக்கைக் குழுவின் அங்கமாக இருப்பார்கள். பதிவு முகமைகளுக்கான தொடக்க நிலை மற்றும் பணியில் சேர்ப்பதற்கான பயிலரங்கத்தை பதிவாளர் ஏற்பாடு செய்வார். பதிவு நடைமுறை&செயலாக்கக் கண்ணோட்டம் குறித்த விரிவான விளக்கங்களை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் வழங்கும். பதிவு முகமைகள் முதலில் பதிவு நடைமுறைகள் குறித்த விவரங்களையும், குறிப்பிட்ட கால இடைவெளியில் திருத்தங்கள்/மாற்றங்கள் செய்வது உள்ளிட்ட கொள்கைகள் குறித்தும் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். பதிவு முகமைகளில் பணி வரம்பு என்பது கீழ்க்கண்ட நடவடிக்கைகளை உள்ளடக்கியதாக இருக்கும்.

  • உடற்கூறு பதிவு செய்யும் கருவிகள் உள்ளிட்ட பதிவுக்காக மென்பொருட்கள், வன்பொருட்கள் ஆகியவற்றை இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் வரையரைப்படி கொள்முதல் செய்தல்

    பதிவு மையங்களில் உடற்கூறுகளை பதிவு செய்வதற்காக பயன்படுத்தப்படும் சான்றளிக்கப்பட்ட உடற்கூறு கருவிகள் ( கை ரேகை மற்றும் கருவிழிப் படலங்களை பதிவு செய்வதற்காக) உள்ளிட்ட பதிவுக்கான மென்பொருட்கள், வன்பொருட்கள் ஆகியவற்றை இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் வரையரைக்கு உட்பட்டு கொள்முதல் செய்ய வேண்டும். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அல்லது அதனால் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பால் சான்றளிக்கப்பட்ட உடற்கூறு பதிவு கருவிகளை மட்டுமே பதிவு முகமைகள் கொள்முதல் செய்ய வேண்டும்.

  • பதிவுக்கான பணியாளர்களை நியமித்து பயிற்சி அளித்தல்

    பதிவு மையங்கள்/ பதிவு நிலையங்களை இயக்குவதற்காக ஆபரேட்டர்கள், மேற்பார்வையாளர்கள் உள்ளிட்ட பணியாளர்களை இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் விதிமுறைகளின்படி நியமிக்க வேண்டும். பதிவு மையங்களில் பதிவு நடைமுறையின் போது தொழில்நுட்ப ஆதரவு வழங்குவதற்காக தொழில்நுட்பப் பணியாளர்களை பதிவு முகமைகள்கொண்டிருக்க வேண்டும். மின்சாரம்/கணினி/உடற்கூறு கருவிகள் சார்ந்த பிரச்சினைகள் எங்கு ஏற்பட்டாலும் அங்கு குறைந்த கால அவகாசத்திற்குள் சென்றடைய வசதியாக ஆறு பதிவு மையங்களுக்கு மையமான பகுதியில் அழைத்தவுடன் வருவதற்கு தயார் நிலையில் வைக்கப்பட்ட வேண்டும்.ஆபரேட்டர்களும், மேற்பார்வையாளர்களும் குறைந்தபட்சம் 18 வயதுக்கும் மேற்பட்டவர்களாக இருப்பதை பதிவு முகமைகள் உறுதி செய்ய வேண்டும். ஆபரேட்டர்கள் 12-ஆம் வகுப்பு முடித்திருப்பதுடன், கணினியை சரளமாக கையாளும் திறன் பெற்றிருக்க வேண்டும். மேற்பார்வையாளர் குறைந்தபட்சம் 12ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். பட்டதாரியாக இருந்தால் நல்லது. கணினியை பயன்படுத்துவதில் நல்ல புரிதலும், அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.

    வருங்கால வைப்பு நிதி, ஈ.எஸ்.ஐ., தொழில்தாவா சட்டம், ஒப்பந்தத் தொழிலாளர் சட்டம், குறைந்தபட்சம் ஊதியச் சட்டம் உள்ளிட்ட அனைத்து தொழிலாளர் சட்டங்கள், சட்டப்பூர்வ விதிகள், ஒழுங்குமுறைகள் ஆகியவற்றை மதித்து நடப்பதை பதிவு முகமைகள் உறுதி செய்ய வேண்டும்.

    பதிவு மையத்தில் பணிக்கு சேருபவர்களுக்கு ஆதார் பதிவு குறித்த பல்வேறு செயல்பாடுகள் குறித்தும், ஆதார் பதிவு நடவடிக்கைகளில் பயன்படுத்தப்படும் கருவிகள் மற்றும் மின்னணு பொருட்கள் குறித்தும், ஆங்கிலம் வழியாக உள்ளூர் மொழிக்கு விவரங்களை மாற்றுவதற்கான ஒலிபெயர்ப்பு குறித்தும் முதல்நிலை பயிற்சி அளிக்கப்பட வேண்டியது கட்டாயம் ஆகும். உள்ளூர் சூழலை புரிந்து கொண்டு அதற்கேற்ற வகையில் தங்களை மாற்றிக் கொள்ள வசதியாகவே இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. பணியாளர்களை பணியில் ஈடுபடுத்துவதற்கு முன்பாக இத்தகைய பயிற்சியை அளிக்க வேண்டியது கட்டாயம் ஆகும். பயிற்சி தொடங்குவதற்கு முன் அதுகுறித்த அட்டவணையை இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் மண்டல அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். பயிற்சி முடித்த பிறகும் அதுகுறித்த தொடர் நடவடிக்கை அறிக்கையை அனுப்பி வைக்க வேண்டும். இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் விதிமுறைப்படி பயிற்சி அளிப்பதற்கான கட்டமைப்பு வசதிகள் இருப்பதை பதிவு முகமைகள் உறுதி செய்ய வேண்டும். ஆபரேட்டர்களும், மேற்பார்வையாளர்களும் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட சோதனை மற்றும் சான்றளிக்கும் நிறுவனத்திடமிருந்து சான்றிதழ் பெற வேண்டும். குறிப்பிட்ட விதிகளின்படி சரியான சான்றிதழ் பெறப்படுவதை உறுதி செய்ய வேண்டும். சான்றளிக்கப்பட்ட ஆபரேட்டர் ஒருபோதும் மேற்பார்வையாளராக பணியாற்ற முடியாது.

    ஆபரேட்டர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கான ஊதியம் அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

  • ஆபரேட்டர்கள் / மேற்பார்வையாளர்களை நியமித்து, அவர்களை இந்திய தனித்துவ அடையாள ஆணையத்திடம் பதிவு செய்து, பணியாற்றும் நிலைக்குக் கொண்டுவரவேண்டும்: <
    • ஆபரேட்டர்கள் / மேற்பார்வையாளர்கள் முதலில் தங்களுக்கான ஆதார் எண்ணைப் பெற்று, இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் விதிமுறைகளுக்கு ஏற்றவாறு செயலாக்க நிலைக்கு கொண்டு வருவதற்கான சான்றிதழ் பெற்று அதன்பிறகு தான் பதிவுகளைத் தொடங்க வேண்டும். பதிவுப்பணியைத் தொடங்குவதற்கான கட்டாயத் தேவைகளை நிறைவேற்றாமல் அவர்களை பணியமர்த்தக்கூடாது.

    • பதிவு முகமைகளின் அட்மின் பயனர் தங்களின் ஆபரேட்டர்கள் / மேற்பார்வையாளர்களை செயலாக்க நிலைக்கு கொண்டு வருவதற்கு தனித்துவமான பயனர் அடையாளத்தை பயன்படுத்த வேண்டும். பல பயனர் அடையாளங்களுக்கு ஒரே கடவுச்சொல்லை பயன்படு