இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் ஆவணங்கள் ஸ்கேன் செய்வதற்கான விதிமுறைகள்என்ன?

எந்த அடிப்படையிலான பதிவு என்பதைப் பொறுத்து , கீழே கொடுக்கப்பட்டுள்ள மூல ஆவணங்களை ஆபரேட்டர் பதிவு செய்வார்:

  • பதிவு படிவம் - ஒவ்வொரு பதிவுக்கும்
  • அடையாளச்சான்று, முகவரிச் சான்று - ஆவணம் சார்ந்த பதிவுகளுக்கு
  • பிறந்த தேதி சான்று - சரிபார்க்கப்பட்ட பிறந்த தேதியை குறிப்பிட
  • உறவுமுறைச் சான்று - குடும்பத்தலைவர் சார்ந்த பதிவுகளுக்கு
  • ஒப்புகை மற்றும் ஒப்புதல் - ஒவ்வொரு பதிவுக்கும் ஆபரேட்டரும், வசிப்பாளரும் கையெழுத்திட்ட பிறகு.
  • மூல ஆவணங்கள் இல்லாத சமயங்களில், பொது நோட்டரி/அரசிதழ் பதிவு பெற்ற அலுவலர் சான்றொப்பம் நகல் சான்றுகள் ஏற்றுக்கொள்ளப்படும்.
  • அனைத்து சான்றுகளும் வரிசையாக ஸ்கேன் செய்யப்படும். ஸ்கேன் செய்யப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் ஏ4 அளவில் இருக்கும்.
  • ஆதார் பதிவின் போது பதிவு செய்யப்பட்ட தகவல் உள்ள பகுதி ஸ்கேன் செய்யப்பட்ட ஆவணங்களில் தெளிவாக இருப்பதையும், ஆவணங்களின் பக்க எண்கள் ஒன்றின் மீது ஒன்று பதிவாகாமல்
  • இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.
  • ஸ்கேன் செய்யப்பட்ட ஒவ்வொரு ஆவணமும் தெளிவாகவும், அழுக்கு, மடிப்பு ஆகியவற்றின் அடையாளம் இல்லாமலும் இருக்க வேண்டும். ஏதேனும் ஒரு ஆவணத்தை மீண்டும் ஸ்கேன் செய்யும்போது முதலில் ஸ்கேன் செய்யப்பட்ட பக்கத்தை நீக்கிவிட வேண்டும்.
  • அனைத்து ஆவணங்களும் ஸ்கேன் செய்யப்பட்ட பிறகு, ஸ்கேன் செய்யப்பட்ட மொத்த பக்கங்கள் எத்தனை என்பதையும், அனைத்து பக்கங்களும் ஸ்கேன் செய்யப்பட்டு விட்டனவா? என்பதையும் சரி பார்க்க வேண்டும்.
  • அனைத்து மூல ஆவணங்களையும், பதிவு படிவத்தையும் வசிப்பாளரிடம் திருப்பித் தர வேண்டும். ஒப்புகை மற்றும் ஒப்புதல் சீட்டையும் வசிப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும்.