வசிப்பாளரின் தகவல்களின் ஆபரேட்டர் எவ்வாறு திருத்தம் செய்வார்?

ஏதேனும் ஒரு வசிப்பாளர் குறித்த தகவல்களில் திருத்தங்களைச் செய்யவேண்டுமானால், ஆதார் கிளைன்ட் மென்பொருளில் உள்ள திருத்தம் செய்யும் வசதியை ஆபரேட்டர் பயன்படுத்த வேண்டும் (ஒருமுறைமட்டும்). ஒரு வசிப்பாளர் பதிவு செய்த நேரத்தில் இருந்து 96 மணிநேரத்திற்குள்   அவர் குறித்த தகவல்கள் திருத்தப்படலாம். இந்த திருத்தப் பணி, வசிப்பாளர் முன்னிலையில் நடைபெற வேண்டும்.
  திருத்த நடைமுறையின் போது, கீழ்க்கண்ட திருத்தங்களுக்கு வேண்டுகோள் ஏற்றுக் கொள்ளப்படலாம்.
 அனைத்து டெமொகிராபிக் தகவல்கள் (உதாரணம்:

  • பெயர், முகவரி,
  •  பாலினம், பிறந்ததேதி / வயது)
  •  வசிப்பாளருக்கான உறவுமுறை
  •  செல்பேசி எண்
  •  மின்னஞ்சல் முகவரி
  •  உறவுமுறை விவரங்கள் (உறவுவகை, பெயர்மற்றும்பதிவுஎண் / ஆதார்எண்)
  •  அறிமுகம் செய்து வைப்பவர் பெயர் மற்றும் ஆதார் எண்

ஒருவசிப்பாளர் 5 வயதுக்குஉட்பட்ட குழந்தையாக பதிவு செய்யப்பட்டிருந்தால், அவரது வயதை 5-க்கும் கூடுதலாக திருத்துவது சாத்தியமல்ல. ஏனெனில், பதிவின் போதுஉடற்கூறு தகவல்கள் பதிவு செய்யப்படவில்லை.
வசிப்பாளரின் பழைய தகவல்களில் திருத்தங்களைச் செய்யும்போது, அவரது முந்தைய பதிவு எண் குறிப்பிடப்பட வேண்டும். பதிவு எண், நாள்,    நேரம் ஆகியவற்றை அறிய வசிப்பாளருக்கு வழங்கப்பட்ட ஒப்புகைச் சீட்டை சரிபார்க்கவும்.
திருத்த நடை முறையின் போது, எந்தவகையான திருத்தத்தை மேற்கொள்கிறோம் என்பதைப் பொறுத்து அடையாளச் சான்று, முகவரிச் சான்று, பெற்றோர் / பாதுகாவலரின் ஒப்புகைக்கடிதம் ஆகியவையும் தேவைப்படும்.
பெயரில் திருத்தம் செய்ய வேண்டுமானால், சரிபார்க்கப்பட்ட பதிவுப்    படிவம் மற்றும் அடையாளச்சான்று ஆவணம், அல்லது அறிமுகம் செய்துவைப்பவரின் பெயர் மற்றும் ஆதார்எண் தேவைப்படும். முகவரியில் மாற்றம் செய்ய வேண்டுமானால், சரிபார்க்கப்பட்ட பதிவுப்படிவம் மற்றும்முகவரிச்சான்று ஆவணம்,அல்லது அறிமுகம் செய்து வைப்பவரின் பெயர் மற்றும் ஆதார் எண் தேவைப்படும். சரிபார்க்கப்பட்ட பிறந்த தேதியில்மாற்றம் செய்ய வேண்டுமானால், சரிபார்க்கப்பட்ட பதிவுப்படிவமும், பிறந்த தேதியும் தேவைப்படும். 5 வயதுக்கு உட்பட்ட குழந்தை தொடர்பான விவரங்களில் திருத்தம் செய்யவேண்டுமானால், பெற்றோரின் உறவுமுறை தொடர்பான விவரங்கள், உறவினர் பெயர் மற்றும் பெற்றோர் /    பாதுகாவலரின் பதிவுஎண் / ஆதார் எண் கட்டாயமாகும்.
எந்தத் தகவலில் திருத்தம் செய்யப்பட வேண்டுமோ, அந்தத் தகவல் மட்டும் மென்பொருளின் திருத்தம் செய்யும் பிரிவில் உள்ளீடு செய்யப்படவேண்டும். திருத்த நடைமுறையின் போது, முந்தைய பதிவில் இடம் பெற்றிருந்த சரியான தகவல்களை மீண்டும் அச்சிடத் தேவையில்லை.
திருத்தப்பட்ட தகவல்களை வசிப்பாளரிடம் காட்டி சரிபார்க்க வேண்டும். திருத்தங்களை வசிப்பாளர் ஏற்றுக்கொண்டதைக் குறிக்கும் வகையில், வசிப்பாளரின் ஏதேனும் ஒரு உடற்கூறு அடையாளத்தை பதிவு செய்யவேண்டும்.
தகவல்கள் திருத்தம் செய்யப்படும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தையாக இருந்தால், அக்குழந்தையின் உறவுமுறை பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளபெற்றோர் / பாதுகாவலரின் உடற்கூறு அடையாளம் பதிவு செய்யப்படும். திருத்த நடைமுறை முடிவடைந்ததும், ஆபரேட்டர் அவரது கைரேகையை   பதிவு செய்து திருத்தப் பணியை முடிக்க வேண்டும். உடற்கூறு அடையாள விலக்குகள் இருந்தால், மேற்பார்வையாளரும், அறிமுகம் செய்பவர்    சார்ந்த சரிபார்ப்பாக இருந்தால், அறிமுகம் செய்பவரும் கைரேகைளைபதிவு செய்யப்பட வேண்டும்.
திருத்த நடைமுறையின் முடிவில் வசிப்பாளரின் புகைப்படத்துடன் கூடிய திருத்தத்திற்கான ஒப்புதல் மற்றும் ஒப்புகைச் சீட்டு அச்சிடப்படும். திருத்தம் செய்ததற்கான ஒப்புகைச்சீட்டில் ஆபரேட்டர் கையெழுத்திட்டு, வசிப்பாளரிடம் ஒப்படைப்பார். திருத்தம் செய்ததற்கு ஒப்புதல் தரும்     வகையில், வசிப்பாளர் கையெழுத்திட வேண்டும். அதன் பின், அந்த ஆவணத்தை வசிப்பாளர் தொடர்பான மற்ற ஆவணங்களுடன் சேர்த்து  ஆபரேட்டர் தொகுக்க வேண்டும்.