சரிபார்ப்பாளரின் பொறுப்புகள் என்னென்ன?

ஆதார் பதிவு மற்றும் மேம்பாட்டின் போது வசிப்பாளர் அவருடைய ஆதார் விண்ணப்பத்துடன் அசல் சான்றிதழ்களையும் / உறுதிச் சான்றிடப்பட்ட நகல்களையும் கொண்டுவர வேண்டும். ஆதார் பதிவு மற்றும் அண்மைப்படுத்தும் விண்ணப்பத்தில் உள்ள தகவல்களையும் துணை புரியும் ஆவணங்களில் உள்ள தகவல்களையும் சரிபார்ப்பாளர் சரிபார்க்க வேண்டும். வசிப்பாளரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணங்களின் பெயர்களும் விண்ணப்பத்தில் உள்ள பெயர்களும் அசல் ஆவணங்களில் உள்ளது போல உள்ளதா என்பதனை சரிபார்ப்பாளர் சோதிக்க வேண்டும்.

  • மையத்தின் செயற்பாட்டு நேரம் முழுவதும் சரிபார்ப்பாளர் பதிவு மையத்தில் இருக்க வேண்டும். பதிவு நேரத்தில் சரிபார்ப்பாளர் அங்கு இருக்கிறார் என்பதனை பதிவாளர் உறுதிசெய்ய வேண்டும்.
  • இந்தியத் தனித்துவ அடையாள ஆணையத்தின் பதிவு நடைமுறைகளின்படி பதிவு மற்றும் அண்மைப்படுத்தும் விண்ணப்பம் சரியாகவும் முழுமையாகவும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது என்பதனை உறுதி செய்வது சரிபார்ப்பாளரின் பொறுப்பு ஆகும். கட்டாயமாக தரப்பட வேண்டும் எந்ததகவலும் விடுபடக் கூடாது மற்றும் விருப்பமான தகவல்களாக கோரப்பட்ட செல்பேசி எண், மின்னஞ்சல் போன்றவற்றையும் அளிக்க வசிப்பாளர்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும்.
  • பதிவு மற்றும் அண்மைப்படுத்தும் விண்ணப்பத்தை சரிபார்த்த பின்னரே சரிபார்ப்பாளர் கையொப்பமிட்டு பொறிப்புரு இடவேண்டும். பொறிப்புரு இல்லையெனில் கையொப்பமிட்டு பின்னர் பெயரை எழுத வேண்டும். பின்னர் வசிப்பாளர் பதிவு செய்வதற்காக பதிவு முகமை ஆப்ரேட்டரிடம் செல்ல வேண்டும்.
  • இருப்பினும் பதிவு செய்த வசிப்பாளர் குறிப்பிட்ட தனித்துவ அடையாளத்தை திருத்த வேண்டும் என வந்தால் வசிப்பாளர் விண்ணப்பத்தில் எல்லாவிவரங்களையும் தர வேண்டியதில்லை. வசிப்பாளர்கள் அவர்களின் அசல் பதிவு எண், நாள், நேரம் மற்றும் திருத்தப்பட வேண்டிய விவரத்தை தந்தால் போதும்.
  • ஆவணத்தில் எந்த ப்பகுதியில் திருத்தம் தேவைப்படுகிறதோ அதனை மட்டும் சரிபார்ப்பாளர் சோதித்தால் போதும். பதிவின் போது இந்தியத் தனித்துவ அடையாள ஆணையத்தின் எத்தகைய பரிசோதனை விதிமுறைகள் பின்பற்றப்பட்டதோ அதே விதிமுறைகளை சரிபார்ப்பாளர் பயன்படுத்தலாம்.
  • உறுதிச் சான்றிடப்பட்ட நகல்கள் / பப்ளிக் நோட்டரி / கெசடட் ஆபிசர் கையொப்பமிட்ட ஆவணங்கள் தவிர ஏனைய ஆவணங்களில் சரிபார்ப்பாளரின் கையொப்பம், கைரேகை, பொறிப்புரு, பெயர் ஆகியன இடம் பெறவேண்டும்.
  • பதிவுமையத்தின் செயல்திறன்களைக் கண்காணிக்க சரிபார்ப்பாளர் மையத்தில் இருத்தல் வேண்டும். பதிவின் போது நடைமுறையில் ஏதேனும் பிறழ்வு இருந்தாலும், கெடுசெயல் நடந்தாலும் இந்தியத் தனித்துவ அடையாள ஆணையத்திற்கும், பதிவாளருக்கும்அவர் உடனடியாக தகவல்அனுப்ப வேண்டும்.