ஆவணங்களை சரிபார்க்கும் போது சரிபார்ப்பாளர் கவனத்தில் கொள்ள வேண்டியவைகளாக இந்தியத் தனித்துவ அடையாள ஆணையம் எடுத்துரைக்கும் வழிகாட்டுதல்கள் என்ன?

 

  • வசிப்பாளரின் பெயர், புகைப்படம் போன்றவை அடையாளத்துக்கான ஆவணமாகும் .இதற்கு துணை நிற்கும் ஆவணங்கள் இரண்டும் உள்ளதா என சரிபார்க்க வேண்டும்.
  • வசிப்பாளரால் அடையாளத்துக்காக சமர்பிக்கப்பட்ட ஆவணத்தில் புகைப்படம் இல்லைஎன்றால் அது செல்லத்தக்க ஆவணமாக ஏற்கப்படக்கூடாது. தொந்தரவு இல்லாத உள்ளடக்கிய சூழலைக் கருத்தில் கொண்டு ஆவணங்களில் பழைய புகைப்படம் இருந்தாலும்அதனை ஏற்க வேண்டும்.
  • ஆவணத்தில் உள்ள பெயர் அவருடையது தானா என்பதனை வசிப்பாளரிடம் கேட்டு உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். இதன் மூலம் வசிப்பாளர் அவரது ஆவணங்களைத்தான் அளித்துள்ளார் என்பதனை உறுதிசெய்து கொள்ளலாம்.
  • நபரின் பெயர் முழுதாக பதிவு செய்யப்பட வேண்டும். பெயருக்குமுன்னால் திரு, செல்வி, திருமதி, மேஜர், டாக்டர் போன்ற வணக்கவார்த்தைகளோ, பட்டங்களோ இடம்பெறக் கூடாது.

 

  • நபரின் பெயரை கவனமாகவும் சரியாகவும் எழுத வேண்டியது மிக முக்கியமானதாகும். உதாரணமாக அந்நபர் வி , விஜயன் என்று சொல்வார் ஆனால் அவருடைய முழுப்பெயர் வெங்கட்ராமன் விஜயனாக இருக்கும், அதே போல கே.சீனிவாசனின் முழுப்பெயர் ரமேஷ்குமார் ஸ்ரீவத்சவாக இருக்கும். அதேபோல கே.எஸ்.கே.துர்கா என்பவரின் முழுப்பெயர் கல்லூரிசூர்யா கனகதுர்கா. எனவே அவருடைய தலைப்பெழுத்தின் விரிவாக்கம்என்ன என்பதனைக் கேட்டு, அதனை தரப்பட்டுள்ள ஆவணத்திலும் உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
  • சொல்லப்பட்ட பெயரில் ஆவணத்தில் வேறுபாடு இருந்தால் அது எழுத்துப்பிழை, அல்லது பெயர்வரிசையில் நடுவில் மத்தியில் மாற்றம் இருந்தால் மட்டுமே அதனை வசிப்பாளர் சொல்கின்றவாறு பதிவு செய்ய வேண்டும்.
  • பதிவு செய்பவர்தரும் இரண்டு ஆவணங்களிலும் பெயர் வேறுபாடு இருந்தால் (அதாவது.. தலைப்பெழுத்து, முழுப்பெயர்) பதிபவரின் முழுப்பெயர்பதிவு செய்யப் பெற வேண்டும்.
  • சில சமயம் குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் பெயர்சூ ட்டப்பெறாமல் இருப்பார்கள். தனிநபர்களுக்கு தனித்துவ அடையாளம் அளிப்பதற்கானபெயர்களின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து சிறார்களின் உத்தேசிக்கப்பட்டுள்ள பெயரைப் பெற வேண்டும். அடையாளத்திற்கான சான்றுகள் இல்லையென்றாலும் அறிமுகப்படுத்துநர் உதவியுடன் பெயர் பதியப்பெற வேண்டும்.

 

  • பிறந்த தேதி

 

  • வசிப்பாளரின் பிறந்த தேதி, நாள், மாதம், ஆண்டு என அதற்குரியஇடத்தில் தரப் பெற வேண்டும்.
  • வசிப்பாளர் பிறந்த நாளுக்கான ஆவணத்தைக் கொடுத்தால் அதனை சரிபார்த் தஆவணமாக கருத வேண்டும். வசிப்பாளர் ஆவணங்கள் எதுவுமின்றி பிறந்ததேதியை தந்தால் அதனை அறிவிக்கப்பட்டது எனக் கருத வேண்டும்.
  • வசிப்பாளர் சரியான பிறந்ததேதியை தராவிட்டால், அவரின் வயதை மட்டும் குறிப்பிட வேண்டும் அல்லது சரிபார்ப்பாளரால் மதிப்பிடப்பட்டு வயது குறிக்கப்பெற வேண்டும். அதுபோன்ற சூழலில் மென்பொருள் தன்னிச்சையாக பிறந்த ஆண்டை கணக்கிட்டுக்கொள்ளும்.
  • பதிவு மற்றும் அண்மைப்படுத்தும் விண்ணப்பத்தில் வசிப்பாளர் பிறந்ததேதி சரிபார்க்கப்பட்டது / அறிவிக்கப்பட்டது என்பதை வசிப்பாளர் சரியாக குறிப்பிட்டுள்ளரா என்பதனை சரிபார்ப்பாளர் உறுதி செய்ய வேண்டும்.

  • இருப்பிட முகவரி

 

  • இருப்பிட முகவரி பெயர் மற்றும் முகவரியைக் கொண்டிருக்கிறதா என்பதனை சரிபார்க்க வேண்டும். இருப்பிட முகவரியில் உள்ள பெயர் அடையாளத்துக்கான சான்றிதலிலுள்ள பெயருடன் ஒத்திருக்கிறதா என்பதனை சரிபார்ப்பாளர் உறுதிசெய்ய வேண்டும். இருப்பிட ஆவணத்திலும், அடையாள ஆவணத்திலும் பிழை, தலைப்பெழுத்து, பெயர்வரிசையில் நடுமுன்வரிசையில் வேறுபாடு இருந்தால் மட்டும் அந்த பெயர் ஏற்புடையதாகும்.
  • மூத்தக்குடிமக்கள், பெற்றோர் மற்றும் பிள்ளைகளுடன் வசிக்கும்வயதானவர்கள், குழந்தைகள் மட்டும் மேற்பார்வையார் பெயரைப்பதிய வேண்டும். அப்படி இல்லையெனில் நிரப்பப்படும் கோரும்இடத்தை காலியாக விடவேண்டும்.
  • முகவரியை அண்மைப்படுத்துதல் அனுமதிக்கப்பட்ட ஒன்றாகும். வசிப்பாளர் வீட்டுஎண், இடைவழி எண், தெருப் பெயர், தட்டச்சு பிழை, அஞ்சல் குறியீட்டு எண்போன்ற சிறியமாற்றங்களை பட்டியலிலுள்ள இல்ல முகவரியில் மேற்கொள்ள அனுமதிக்கப்படுவர். ஆனால் இந்தமாற்றம் அல்லது திருத்தம் ஆவணத்தில் உள்ள அடிப்படை முகவரியை மாற்றக்கூடாது.
  • முகவரியை அண்மைப்படுத்த வைக்கப்பட்ட கோரிக்கை இருப்பிட சான்று ஆவணத்தில் உள்ள அடிப்படைமுகவரியை மாற்றும் வண்ணம் இருந்தால் , வசிப்பாளர் வேறு இருப்பிடச் சான்றைக்கொண்டு வர வேண்டும் அல்லது அறிமுகப்படுத்துநர் மூலமாக பதிய வேண்டும்.

  • உறவு விவரம்

 

  • ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தையாக இருந்தால் பொற்றோரில் ஒருவர் அல்லது மேற்பார்வையாளர் பெயர் மற்றும் ஆதார் எண் அவசியமாகும். குழந்தைகளைப் பதியும் போது பொற்றோர் அல்லது மேற்பார்வையாளர் தங்கள் ஆதார் கடிதத்தை கண்டிப்பாக காண்பிக்க வேண்டும் (அவை இரண்டும் ஒருசேர பதியப் பெற வேண்டும்).
  • முழு வளர்ச்சியடைந்தவராக இருக்கும் பட்சத்தில் தகவலுக்காக பெற்றோர் அல்லது துணைவரின் விவரங்களைப் பரிசோதனை    செய்ய தேவையில்லை. அவை அகத் தேவைக்காக மட்டும் பதிவு  செய்யப்படும்.

 

  • குடும்பத்தலைவர்

  • வசிப்பிடத்துக்கான ஆவணம் குடும்ப உறுப்பினர்களுக்கும் குடும்பத்தலைவருக்கும் உள்ள உறவுநிலையை வெளிப்படுத்துகிறதா என்பதனை சரிபார்க்க வேண்டும். அந்த குடும்ப உறுப்பினர்களின்பெயர்கள் மட்டுமே உறவு ஆவணத்தில் பதிவுசெய்யப்பட வேண்டும்.
  • குடும்ப உறுப்பினர்கள் பதிவு செய்யவரும் சமயத்தில் குடும்பத்தலைவர் உடன்வருதல் வேண்டும்.
  • குடும்பத்தலைவர் குறித்த சரிபார்த்தலின் போது சரிபார்ப்பாளர்குடும்பத்தலைவர் குறித்த விவரங்களை ஆதார் பதிவு, அண்மைப்படுத்தும் விண்ணப்பத்தில் சரிபார்க்க வேண்டும். குடும்பத் தலைவரின்பெயர், ஆதார் எண் போன்றவற்றை ஆதார் கடிதத்தை வைத்து சரிபார்க்க வேண்டும்.
  • குடும்பத்தலைவர் சார்ந்த பதிவில், குடும்பத்தலைவர் குறித்த விவரங்கள் அவ்விண்ணப்பத்தில் இருப்பது போல உள்ளதா என்பதனை உறுதிப்படுத்த வேண்டும்.