அறிமுகப்படுத்துநரின் பொறுப்புகள் என்ன?

நேர்த்திக்காகவும் முழுமைக்காகவும் பதிவு விண்ணப்பத்திலுள்ள பதிவாளரின் பெயர் மற்றும் முகவரியை அறிமுகப்படுத்துநர் சரிபார்க்கவேண்டும். அறிமுகப்படுத்துநர் பதிவு விண்ணப்பத்திலுள்ள தமது விவரங்களை சரிபார்த்த பின்னர் அதற்கென ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் தமது கையொப்பம் அல்லது கைவிரல் ரேகையைப் பதிய வேண்டும்.

  • பதிவுமையத்தின் பணிநேரத்தில் கையொப்பமிட வசதியாக வசிப்பாளர்கள் அணுகும் வண்ணம் அறிமுகப்படுத்துநர்கள் இருத்தல் வேண்டும். பணி நேரத்தில் அவர் இருக்க வாய்ப்பில்லாத சூழலில்அந்நாளின் இறுதியில் பதிவுமையத்திற்கு சென்று கையொப்பத்திற்காக நிலுவையில் உள்ளவசிப்பாளர்கள் குறித்து பரிசோதிக்க வேண்டும்.
  • வசிப்பாளரின் பெயர் மற்றும் முகவரியை அறிமுகப்படுத்துநர் கவனமாக பரிசீலித்த பின்னரே தமது ஒப்புதல் அல்லது நிராகரித்தலைத் தெரிவிக்க வேண்டும்.
  • ஆதார் பெற விரும்பும் வசிப்பாளர் பதிவு செய்யும் போது அறிமுகப்படுத்துநர் அவரின் உடற்கூறு அடையாளத்தை ஒப்பளிக்க வேண்டும்.
  • பதிவு செய்ய தேவையான இடத்தில் தமது ஒப்புதலை அறிமுகப்படுத்துநர் தமது கைரைகைப்பதிவின் வாயிலாக அளித்தல் வேண்டும்.
  • தாம் அறிமுகப்படுத்தும் வசிப்பாளரின் அடையாளம் மற்றும் முகவரியை அறிமுகப்படுத்துநர் உறுதி செய்ய வேண்டும்.
  • அடையாளச் சான்று அல்லது முகவரிச்சான்று இல்லாத வசிப்பாளர்களை மட்டுமே அறிமுகப்படுத்துநர் அறிமுகப்படுத்த வேண்டும்.
  • தம்மை அணுகுபவர்களை எல்லாம் அறிமுகப்படுத்துநர் அறிமுகப்படுத்த வேண்டும் என்ற கடப்பாடு கொண்டவரல்ல.
  • அறிமுகப்படுத்துநர் வசிப்பாளர்களை அறிமுகப்படுத்த கட்டணம் எதுவும் வாங்கக்கூடாது.ஆயினும் இவர்களுக்கு பதிவாளர் இப்பணிக்கென மதிப்பூதியம் நிர்ணியக்க வேண்டும்.