ஆதார் பதிவின் போது எந்தெந்த வகையான தகவல்கள் பதிவு செய்யப்படும்?

ஆதார் பதிவின்போது இரு வகையான தகவல்கள் பதிவு செய்யப்படும். அவை டிமோகிராபிக்( பெயர், பாலினம், பிறந்த தேதி, செல்பேசி எண், மின்னஞ்சல் முகவரி) மற்றும் உடற்கூறு தகவல்கள் (10 விரல்ரேகை பதிவுகள், இரு கருவிழிப்படலங்கள் மற்றும் புகைப்படம்) ஆகும். செல்பேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவை கட்டாயமல்ல. விருப்பமிருந்தால் மட்டும் அவற்றை பதிவு செய்து கொள்ளலாம்.