ஆதாருக்காக பதிவு செய்யப்பட்ட ஒப்புகைச் சீட்டு/ ஆதார் கடிதம் தொலைத்து விட்டது. அதைக்கண்டு பிடிக்க ஏதேனும் வழிகள் உண்டா?

உண்டு. உங்களின் செல்பேசி எண் ஆதாரில் பதிவு செய்யப்பட்டிருந்தால், என்ற இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் இணையதளத்தில் ஆதார் பதிவு பகுதியில் உள்ள “தவறவிட்ட ஆதார் அடையாள பதிவு எண்ணை திரும்பப்பெற ” என்ற தலைமையிலான இணைப்பை கிளிக் செய்து ஆதார் பதிவு எண் அல்லது ஆதாரைக் கண்டு பிடிக்கலாம். திரும்பப்பெற வேண்டிய ஆதார் பதிவு எண் அல்லது ஆதாரை தேர்வு செய்து அதன்பின்னர் உங்கள் பெயரையும், ஆதாரில் பதிவு செய்துள்ள செல்பேசி எண்ணையும் உள்ளிட்டால் உங்களின் ஆதார் பதிவு எண்/ ஆதார் உங்களின் செல்பேசி அல்லது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்.

ஒருவேளை உங்களின் செல்பேசி எண் ஆதாரில் பதிவு செய்யப்படவில்லை என்றால் அருகிலுள்ள நிரந்தர ஆதார் பதிவு மையத்திற்கு தான் செல்ல வேண்டும்.