ஒரு வசிப்பாளர் அவரது ஆதார் பதிவு நிராகரிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய என்ன செய்ய வேண்டும்?

பதிவு செய்யப்படு போது வசிப்பாளரின் முன் உள்ள திரையில் அவரது பெயர் மற்றும் விவரங்கள் ஆங்கிலத்திலும், உள்ளூர் மொழியிலும் சரியாக உள்ளதா? என்பதை சரிபார்க்க வேண்டும். பெயர், பாலினம், பிறந்த தேதி, முகவரி ஆகியவை சரியாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அதேபோல், பெயருக்கு முன்பாக திரு./ திருமதி./ கர்னல்./ டாக்டர். போன்ற முன்விகுதிகளோ, பின் விகுதிகளோ இல்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இனிசியல்களை தருவதற்கு பதிலாக முழுப்பெயரையும் வழங்கும்படி பரிந்துரைக்கப்படுகிறது. உதாரணமாக பி.கே. ஷர்மா என்பதை பிரிஜ் குமார் ஷர்மா என்று எழுதுவது நல்லது. ஆபரேட்டரால் எடுக்கப்பட்ட உங்களின் புகைப்படம் சரியாகவும், அடையாளம் காணும் வகையிலும் உள்ளதா? என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும்.