குடும்ப பதிவுகளின் போது பின்பற்றுவதற்காக வரையறுக்கப்பட்ட நடைமுறைகள் ஏதேனும் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்திடம் உள்ளதா?

ஆம். குடும்பத் தலைவர் அவரது மூல அடையாளச்சான்றுகள்/ முகவரிச் சான்றுகளை கொண்டு வர வேண்டும். அந்தக் குடும்பத்திற்கான ரேஷன் அட்டையில் யாருடைய பெயர்களும், விவரங்களும் உள்ளனவோ அவர்களை மட்டும் தான் தான் ஆதாருக்கு பதிவு செய்ய முடியும். குடும்பப் பதிவுகளைப் பொறுத்தவரை குடும்பத்தில் உள்ள அனைவரும் முடிந்தவரை ஒன்றாக வர வேண்டும். அனைவரும் ஒரே நாளில் வர முடியாவிட்டால், வர முடியாதவர் இன்னொரு நாள் பதிவுக்காக வரும் போது அவருடன் குடும்பத் தலைவரும் வர வேண்டியது கட்டாயமாகும்.