முகவரிச்சான்றில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரி அஞ்சல் மூலம் கடிதம் வழங்குவதற்கு போதுமானதாக இல்லை என்றால் என்ன செய்வது? வசிப்பாளர் தரும் கூடுதல் விவரங்கள் ஏற்றுக்கொள்ளப்படுமா?-

ஆம். முகவரிச் சான்றில் வீட்டு எண், சந்து எண், தெரு பெயர் போன்றவற்றை சேர்த்துக் கொள்ளவும், எழுத்துப் பிழைகளை சரி செய்யவும், பி ன்கோடு போன்றவற்றை சேர்த்துக் கொள்ளவும் வசிப்பாளர் அனுமதிக்கப்படுவார். முகவரிச் சான்றில் உள்ள முகவரியின் அடிப்படையை மாற்றிவிடாத வகையிலான அனைத்துத் திருத்தங்களும் அனுமதிக்கப்படும். வசிப்பாளர் கோரும் திருத்தம் பெரியதாகவும், அடிப்படை முகவரியை மாற்றக் கூடியதாகவும் இருந்தால், அதை பதிவு செய்வதற்காக மாற்று முகவரிச் சான்றை வழங்கியோ அல்லது அறிமுகம் செய்பவர் மூலமோ தான் ஆதாருக்கு பதிவு செய்து கொள்ள வேண்டியிருக்கும்.