காப்பகப்படுத்தப்பட்ட ஆதார் லோகோ

போட்டி

கடந்த 2010ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ஆதாருக்கான லோகோ போட்டியை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் நாடு தழுவிய அளவில் தொடங்கியது. அடுத்தடுத்த வாரங்களில் நாடு முழுவதிலுமிருந்து 2000-க்கும் மேற்பட்ட பதிவுகள் வரப்பெற்றன.

வெற்றி பெறும் பதிவை தீர்மானிப்பதற்கான கூறுகள் வருமாறு:

  • ஆதாரின் நோக்கம் மற்றும் பயன்பாட்டின் சாராம்சத்தை வெளிக்கொண்டுவரும் வகையில் லோகோ அமைய வேண்டும்
  • ஆதார் என்பது நாடு முழுவதும் உள்ள தனிநபர்களின் மாற்றத்திற்கான வாய்ப்பு என்பதையும், அது தான் சேவைகளையும் ஏழைகள் வளங்களை பெறுவதற்கான வாய்ப்புகளை சமத்துவமானதாக்கும் என்பதை தெரிவிக்கும் வகையில் லோகோ அமைய வேண்டும்
  • எளிதில் புரிந்து கொள்ளக் கூடியதாகவும், ஆதாரின் நோக்கத்தை தெரிவிக்கக்கூடியதாகவும் வகையில் லோகோ அமைய வேண்டும்

போட்டிக்காக பெறப்பட்ட லோகோக்களில் பெரும்பாலானவை புதுமையானவையாகவும், சிறந்த தரம் கொண்டவையாகவும் இருந்தன. போட்டிக்காக வந்த வடிவமைப்புகளை இந்திய தனித்துவ ஆனையத்தின் ஆலோசனைக் குழுவான, புகழ்பெற்ற தகவல் தொடர்பு வல்லுனர்களைக் கொண்ட விழிப்புணர்வு மற்றும் தொடர்பு உத்தி ஆலோசனைக் குழு மதிப்பீடு செய்தது.

நிர்ணயிக்கப்பட்ட கூறுகளின் அடிப்படையில் இறுதிச் சுற்றுக்கான போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். ‘‘ இறுதிச் சுற்றுக்கான போட்டியாளர்களைத் தேர்வு செய்வதிலும், வெற்றியாளரை தேர்ந்தெடுப்பதிலும் கடும் சிரமத்தை எதிர்கொண்டோம். நல்லவேளையாக ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட தேர்வுக் கூறுகளை நாங்கள் பின்பற்றியதால் விருப்பு வெறுப்பு மற்றும் ஒரு சார்பு நிலை குறைந்தது’’ என்று குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான திரு. கிரன் காலப் தெரிவித்தார்.

இறுதிச் சுற்றுக்குத் தேர்வானவர்கள்:

  • மைக்கேல் ஃபோலே
  • சாஃப்ரான் பிராண்ட் கண்சல்டண்ட்ஸ்
  • சுதிர் ஜான் ஹோரோ
  • ஜெயந்த் ஜெயின் மற்றும் மகேந்திரக் குமார்
  • அதுல் எஸ். பாண்டே

இங்கு காட்டப்படும் வெற்றி பெற்ற லோகோவை புனே நகரைச் சேர்ந்த திரு. அதுல் எஸ். பாண்டே தாக்கல் செய்திருந்தார்.

winning
winning2

’’ஆதார் திட்டத்திற்கு பங்களிப்பதற்கான இந்த வாய்ப்பை எனக்கு கிடைத்த பெருமையாக கருதுகிறேன். அனைவருக்கும் சம வாய்ப்பு என்ற இந்திய தனித்துவ ஆணையத்தின் உறுதிப்பாட்டை இந்த போட்டி வலியுறுத்துவதாக நான் நம்புகிறேன். ஏனெனில், உண்மையாகவே மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய திட்டத்தின் ஓர் அங்கமாக இருக்கவும், லோகோவை வடிவமைக்கவும் எங்களில் பலருக்கு இது வாய்ப்பு அளித்தது’’ திரு. பாண்டே கூறினார்.

Logo Launch

lounch1
lounch2
lounch3

ஆதார் திட்டத்திற்கான லோகோ 26.04.2010 அன்று புதுதில்லியில் உள்ள விஞ்ஞான பவனில் நடைபெற்ற இந்திய தனித்துவ ஆணையத்தின் சூழல் அமைப்பு விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. லோகோ போட்டியில் வெற்றி பெற்றவரான அதுல் எஸ். பாண்டேவுக்கு ரூ.1,00,000 பரிசுத் தொகை வழங்கப்பட்டது. இறுதிப்போட்டிக்கு தேர்வான மற்ற 4 பேருக்கு தலா ரூ.10,000 வழங்கப்பட்டது.